Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,357.21
413.53sensex(0.57%)
நிஃப்டி22,288.10
140.20sensex(0.63%)
USD
81.57
Exclusive

கழுத்து, தொடை, அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமையை போக்க ஒரே ஒரு பொருள் போதும்.. 

Nandhinipriya Ganeshan September 09, 2022 & 19:20 [IST]
கழுத்து, தொடை, அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமையை போக்க ஒரே ஒரு பொருள் போதும்.. Representative Image.

How to Remove Neck, Inner Thighs, Under Arms Darkness at Home in Tamil: கழுத்தில் பெண்கள் தாலி கயிறு அல்லது தங்க செயின் போன்றவற்றை நீண்ட காலமாக அணிந்து கொண்டே இருப்பதால் பெரும்பாலானோருக்கு அந்த இடத்தில் கருப்பாக இருக்கும். அதேபோல் ஆண்களுக்கு அக்குள் பகுதிகளில் அதிகமாக கருமை படர்ந்து காணப்படும். அடிக்கடி ஷேவிங் செய்வதால் ஆண், பெண் இருபாலருக்கும் தொடை இடுக்குகளில் அதிகமாக கருமையான திட்டுக்கள் தென்படும். இப்படி தொடை, கழுத்து, அக்குள் போன்ற இடங்களில் இருக்கக் கூடிய கருமை திட்டுகளை ரொம்பவும் எளிமையாகவும் சுலபமாகவும் வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு எவ்வாறு நீக்குவது என்று இப்பதிவில் பார்க்கலாம்.

இதற்காக நீங்க கடைகளில் கிரீம்களை காசு கொடுத்து வாங்கி தடவ வேண்டிய அவசியமே இல்லை. இருக்கவே இருக்க பால், இதில் இருக்கும் அதிகளவிலான லாக்டிக் ஆசிட் இந்த பகுதிகளில் இருக்கும் கருமையை மேலோட்டமாக சுத்தம் செய்யக் கூடியது. 

❖ முதலில் சிறிதளவு பாலை ஒரு பவுலில் எடுத்து கொண்டு அதை பஞ்சில் நன்றாக நனைத்து, முதலில் கருப்பாக இருக்கும் இடங்களில் எல்லாம் நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பாலுக்கு பதிலாக உருளைக்கிழங்கை சாறையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

Also Read: தொடை கருமையை போக்கும் 12 வீட்டு வைத்தியம்!

❖ பாலை கொண்டு சுத்தம் செய்த பின்னர், ஒரு பழுத்த தக்காளியை இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் சர்க்கரையை தொட்டு அதை அப்படியே கருமை இருக்கும் இடத்தில் வைத்து ஸ்கரப் செய்யுங்கள். 

❖ இதை 10 நிமிடம் ஊறவிட்டு, மீண்டும் இன்னொரு பாதி தக்காளியில் சர்க்கரையை தொட்டு அதேபோல தேய்த்து ஒரு ஈரத் துணியால் துடைத்து எடுத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பாதி அளவிற்கு கருமை நீங்கிவிடும். 

Also Read: கருவளையம் மறைய சூப்பரான வீட்டு வைத்தியம்..

❖ அதன்பின்னர், ஒரு பவுலில் 2 ஸ்பூன் அரிசி மாவு, 1 ஸ்பூன் பன்னீர், 1/2 ஸ்பூன் ஆவாரம் பொடி அல்லது அதிமதுர பொடி, 5 சொட்டு கிளிசரின் சேர்த்து கலக்கி, எங்கெல்லாம் கருமை இருக்கிறதோ, அந்த இடத்தில் எல்லாம் தடவி உலர விட வேண்டும்.

❖ 1/2 மணி நேரம் கழித்து ஒரு டிஷ்யூ பேப்பரால் அழுத்தம் கொடுத்து துடைத்து எடுத்தால், அந்த பகுதிகளில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். இவ்வாறு கருமை நீங்கும் வரை தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்ய வேண்டும்.

❖ இவ்வாறு செய்வதன் மூலம் மிக சீக்கிரத்திலேயே மெல்ல மெல்ல கருமை முழுவதுமாக மறைந்துவிடுவதோடு மட்டுமல்லாமல், மீண்டும் வராது. 

Also Read: கழுத்தில் இருக்கும் கருமையை போக்குவது எப்படி? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்