Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Get Rid of Dark Lips Naturally in Tamil: உங்க உதடு கருப்பா இருக்கா..? சிகப்பா மாற்ற இதோ வீட்டு வைத்தியம்...

Nandhinipriya Ganeshan August 01, 2022 & 15:15 [IST]
How to Get Rid of Dark Lips Naturally in Tamil: உங்க உதடு கருப்பா இருக்கா..? சிகப்பா மாற்ற இதோ வீட்டு வைத்தியம்...Representative Image.

How to Take Care of Dry Lips Naturally: உதட்டின் நிறம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மேலும், நம்மில் பெரும்பாலானோருக்கு இயற்கையாகவே உதடு கருமையாக இருக்கும். கருமை நிற உதடுகளை சிவப்பாக மாற்றுவது ஒன்றும் இயலாத காரியம் கிடையாது. கொஞ்சம் பராமரிப்பு கூடுதல் கவனிப்பும் இருந்தால் அழகான உதடுகளை பெற்று விடலாம். 

இளவயதினர் கம்மியாகவே இந்த பாதிப்புக்கு ஆளானாலும் வயது அதிகமாகும்போது பெண்களும் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். உதடுகள் கருப்பாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுவான காரணங்களில் ஒன்று ஹைபர் பிக்மெண்டேஷன் ஆகும். அதாவது உங்க உதடுகளின் மேல் அதிகப்படியான மெலனின் உற்பத்தி. 

உதடு கருமைக்கான காரணங்கள்:

  • புகைப்பிடித்தல்
  • சூரிய ஒளி 
  • பற்பசை (toothpaste) 
  • உதட்டுச்சாயம் (lipstick)
  • நீர்ச்சத்து குறைபாடு
  • அதிகமாக காஃபி குடிப்பது
  • வைட்டமின் குறைபாடு
  • இரத்த சோகை
  • கீமோதெரபி
  • அதிகப்படியான ஃவுளூரைடு பயன்பாடு
  • தொடர்ந்து உதடுகளை நக்குதல்
  • வாழ்க்கை முறை மாற்றங்கள்

கருமையான உதடுகளை இயற்கையாக சிவப்பாக்குவது செய்வது எப்படி?

எலுமிச்சை

சில சமயங்களில் சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை சாறு சருமத்திற்கு எரிச்சலை உண்டாக்கினாலும், பெரும்பாலான வீட்டு வைத்தியங்களில் இயற்கை மருந்தாக செயல்படுகிறது. தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, சிறிதளவு எலுமிச்சை சாறு ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயுடன்  சேர்த்து உதட்டின் மீது தடவிக் கொள்ளுங்கள். மறுநாள் காலை தண்ணீரில் கழுவிவிடுங்கள். எலுமிச்சை இயற்கை சுத்தப்படுத்தியாக இருப்பதால் இது கறைபடிந்த (how to permanently lighten dark lips) உதடுகளை வெண்மையாக்க செய்கிறது. ஆலிவ் எண்ணெய் உதட்டை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

கற்றாழை

கற்றாழையில் அலோயின் என்ற கலவை இருப்பதால், இது உதடுகளில் உள்ள நிறமியை மங்கச் செய்து உங்க சருமத்தை ஆழமாக (how to lighten dark lips in tamil) சிவப்பாக்குகிறது. ஒவ்வொரு இரவும் படுக்கைக்கு செல்வதற்கு முன், அரை ஸ்பூன் கற்றாலை ஜெல் எடுத்து உங்கள் உதடுகளின் மீது தடவி, சிறிது மசாஜ் செய்யுங்கள். பின்னர், அதை அப்படியே உலரவிடவும். மறுநாள் காலையில் தண்ணீரில் கழுவிவும்.

மாதுளை

உதட்டின் அழுக்கை வெளியேற்ற வாரத்திற்கு ஒருமுறையாவது ஸ்க்ரப் செய்ய வேண்டும். பொதுவாக சர்க்கரையை பயன்படுத்தி ஸ்க்ரப் செய்வது போன்று மாதுளை விதைகளை கொண்டும் ஸ்க்ரப் செய்யலாம். இது உதட்டின் அழுக்கை நீக்குவதோடு அதனை சிவப்பாகவும் மாற்றுகிறது. 1 டீஸ்பூம் மாதுளை விதைகள், 1 டீஸ்பூன் கிரீம் பால், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து உதட்டின் மேல் 3 - 4 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்யவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.

மஞ்சள்

மஞ்சளுக்கு உதட்டின் மீது உற்பத்தியாகும் அதிகப்படியான மெலனினை தடுக்கும் பண்பு உண்டு. 1 டீஸ்பூன் மஞ்சளுடன் 1-2 டீஸ்பூன் பால் சேர்த்து உதடுகளில் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும். அதை 5 நிமிடங்கள் விட்டு தண்ணீரில் கழுவவும். 

தேங்காய் எண்ணெய்

சரும வறட்சியால் உண்டாகும் உதடு கருமையை தேங்காய் எண்ணெய் தடுக்கிறது. உதட்டு கருமைக்கு இது எளிதான மற்றும் பயனுள்ள தீர்வாகும். விரல் நுனியில் சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து, உதட்டில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதை தினமும் 1-2 முறை செய்யலாம். 

பீட்ரூட்

பீட்ரூட்டில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் இருக்கிறது, இது கருமையான உதடுகளை சிவப்பாக மாற்ற உதவுகிறது. தேவையான அளவு பீட்ரூட்டை எடுத்து அதை மிக்சியில் அரைத்து, அந்த பேஸ்ட்டை உதடுகளில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். மிருதுவான சிகப்பான உதடுகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறாய் செய்யலாம்.

ஆரஞ்சு பவுடர்

ஆரஞ்சு பழத்தின் தோலை எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து காய்ச்சாத பாலை சேர்த்து குழைத்து அதை உதட்டின் மீது தடவி பேக் போடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து உதட்டை குளிர்ந்த நீரில் கழுவி எடுங்கள். தினமுமே இதை செய்வது வந்தால் மென்மையான உதடுகளை (how to remove darkness in lips) பெறலாம்.

TAG:

How to get rid of dark lips permanently, How to get rid of dark lips naturally in tamil, How to lighten dark lips at home in tamil, How to get pink lips naturally, How to get pink lips naturally at home, How to get pink lips naturally at home in tamil, How to take care of lips at home, How to take care of lips daily


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்