Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேஜஸான கூந்தலுலை பெற இந்த டிப்ஸ முயற்சி பண்ணி பாருங்க..

Nandhinipriya Ganeshan September 04, 2022 & 09:20 [IST]
தேஜஸான கூந்தலுலை பெற இந்த டிப்ஸ முயற்சி பண்ணி பாருங்க.. Representative Image.

டிப்ஸ் - 1

ஒரு மூடி தேங்காயை எடுத்து சிறிதளவு நீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் பாலை தலையில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அடுத்த நாளோ அல்லது தேவைப்படும் போதோ ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கலாம். முடி உதிர்வது நிற்கிற வரை வாரம் ஒரு முறை செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், இவ்வாறு செய்வதன் மூலம் முடி மிருதுவாகும், புதிய முடிகள் வளர தொடங்கும். குறிப்பு: இதை பயன்படுத்துவதற்கு முன் தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டும். உதாரணமாக, வெள்ளிக்கிழமை தலைக்கு குளித்தால் அடுத்த நாள் சனிக்கிழமை காலை அப்ளை செய்யவும்.

டிப்ஸ் - 2

முட்டை, தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் அனைத்தையும் சரிசமமாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கூந்தலை சரிசமமாக இரண்டு பாகமாக பிரித்துக் கொண்டு, இந்த கலவையை வட்டவடிவில் தடவுங்கள். இதனால், ஸ்கேல்ப்பில் இரத்த ஓட்டம் மேம்படும். இரத்த ஓட்டத்தில் முன்னேறம் இருந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். இதை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்யலாம்.

டிப்ஸ் - 3

பொடுகு நீங்க, 1/4 கப் தேங்காய் பாலை சூடாக்கி, சிறிது சூடாக இருக்கும்போதே அதை நேரடியாக உச்சந்தலையில் அப்பளை செய்து 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்து கொள்ளவும். பின்னர் ஷவர் கேப் கொண்டு உங்க தலையை ஒரு மணி நேரமாவது மூடி வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, வழக்கமான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். வாரத்திற்கு ஒருமுறை இதை செய்யுங்கள் நீங்களே வித்தியாசத்தை பார்ப்பீர்கள். 

டிப்ஸ் - 4

தேங்காய் பால் ஒரு கப், தேன் 2 ஸ்பூன், ஆலிவ் ஆயில் 1 டீஸ்பூன் மூன்றையும் கலந்துக் கொள்ளவும். பின்னர், உங்க தலை முடியை நீராவியை கொண்டு உச்சந்தலையில் உள்ள சரும துளைகளை திறக்க செய்ய வேண்டும். இப்போது நாம் கலந்து வைத்துள்ல தேங்காய் பாலை ஒரு காட்டன் பாலில் நனைத்து உச்சந்தலையில் அப்ளை செய்து, 5-7 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதை அரை மணி நேரம் கழித்து லேசான ஷாம்புவை பயன்படுத்தி அலசிக் கொள்ளலாம். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால், உங்க முடி அழகாகவும் கருமையாகவும் செழிப்பாகவும் வளரும்.

Coconut milk for hair growth in tamil, hair care tips in tamil, coconut mil for hair, hair growth home remedies in tamil, how to use coconut milk for hair growth, how to use coconut milk for hair growth in tamil, how to use coconut milk for hair regrowth, how to get soft and silky hair at home in tamil, how to get soft and silky hair naturally at home


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்