Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Increase Hemoglobin Levels in Tamil: இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை இயற்கையாகவே அதிகரிக்கணுமா? இத சாப்பிடுங்க..!!

Nandhinipriya Ganeshan June 27, 2022 & 10:00 [IST]
How to Increase Hemoglobin Levels in Tamil: இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை இயற்கையாகவே அதிகரிக்கணுமா? இத சாப்பிடுங்க..!!Representative Image.

How to Increase Hemoglobin Levels in Tamil: இந்த உணவு பொருட்களை தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை இயற்கையாக அதிகரிக்க முடியும். இதன் மூலம் இரத்த சோகை மற்றும் பிற நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்போது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகளை பார்க்கலாம்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள்:

❖ மூன்று உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தினமும் காலையில் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் பிரச்சனைகள் தீரும். மேலும், 9 நாட்களுக்கு 3 உலர் திராட்சையை பாலில் ஊற வைத்து குடித்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

❖ உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமென்றால் பீட்ரூட் காயை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் பொட்டாசியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. நாள்தோறும் பீட்ரூட் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்து வந்தால் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். 

❖ இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு வேகமாக (foods to increase hemoglobin in tamil) அதிகரிக்கும்.

❖ புடலங்காய் இலையின் சாறு, காலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுத்து வர இருமல், கக்குவான் குணமாகும். அதுமட்டுமல்லாமல் தொடர் இருமல், தொண்டை வலி போன்றவற்றிலிருந்தும் தப்பிக்கலாம். மலச்சிக்கல் பிரச்சனைக்கும் நல்ல மருந்து. 

❖ வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை முருங்கை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இரும்புச்சத்து மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் அதிகளவில் நிறைந்துள்ளன. இது, இரும்புச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் இரத்த சோகை நோயிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும். 

❖ புதினா, பொன்னாங்கன்னி கீரை மற்றும் அரைக் கீரை போன்றவற்றை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் (how to increase hemoglobin level quickly) உற்பத்தியாகும். 

❖ உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மாதுளை. இந்த பழத்தை வாரம் இருமுறை ஜூஸாகவோ அல்லது அப்படியாகவோ சாப்பிட்டு வர உடலில் புதிய இரத்தம் உருவாவதோடு பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்