Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும் சில உணவுகள்.. கட்டாயம் தவிர்க்க வேண்டும்...

Nandhinipriya Ganeshan November 10, 2022 & 23:00 [IST]
ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும் சில உணவுகள்.. கட்டாயம் தவிர்க்க வேண்டும்...Representative Image.

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆசைப்படும் அனைவருமே உணவு விஷயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதாவது, உணவு முறையில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். குறிப்பாக, ஆண்கள். ஏனென்றால், குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதினால் ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே, ஆண்கள் சில உணவுகளை அதிகம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அந்தவகையில், ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையையும், அதன் வீரியத்தையும் அதிகரிக்கும் உணவுகள்..

ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும் சில உணவுகள்.. கட்டாயம் தவிர்க்க வேண்டும்...Representative Image

பாப்கார்ன்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான ஸ்நாக்ஸ். இருந்தாலும், இந்த பாப்கார்னில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள், அதிக சோடியம், கார்சினோஜென்கள் அதிகளவில் இருக்கின்றன. எனவே, செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படும் பாப்கார்ன்களை சாப்பிடுவது ஆண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வது எப்படி?

ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும் சில உணவுகள்.. கட்டாயம் தவிர்க்க வேண்டும்...Representative Image

பால் பொருட்கள்

பொதுவாக பால் பொருட்கள் ஆரோக்கியமானது தான், இருந்தாலும் அவற்றில் அதிகளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கொழுப்பு ஆண்களின் விந்தணுக்களை குறைத்துவிடுமாம். எனவே, பால் சார்ந்த பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்வது குறைத்துக்கொள்ளுங்கள்.

பெண்கள் அடிக்கடி சுயஇன்பம் கொண்டால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்..

ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும் சில உணவுகள்.. கட்டாயம் தவிர்க்க வேண்டும்...Representative Image

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு கேடுவிளைக்கும் என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். அதிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது என்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்று. குறிப்பாக, ஆண்கள் இதை சாப்பிட்டால் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சானிட்டரி நாப்கின்களில் மறைந்திருக்கும் ஆபத்து.. தப்பிப்பது எப்படி? 

ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும் சில உணவுகள்.. கட்டாயம் தவிர்க்க வேண்டும்...Representative Image

பிரெஞ்சு ப்ரைஸ்

பாப்கார்னுக்கு அடுத்தப்படியாக அனைவரும் விரும்பி சாப்பிடும் மற்றொரு மொறு மொறு ஸ்நாக்ஸ். பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிடுவதற்கு நன்றாக தான் இருக்கும், ஆனால் ஆண்கள் இதை சாப்பிடுவதால் விந்தணு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்..

ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும் சில உணவுகள்.. கட்டாயம் தவிர்க்க வேண்டும்...Representative Image

ஆல்கஹால்

மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது என்று அனைவருக்குமே தெரியும். ஆனால், ஆண்கள் அதை பற்றி கவலைபடுவதே கிடையாது. அதுவும் இந்தகாலத்தில் பெண்களும் மது அருந்த ஆரம்பித்துவிட்டார்கள். எது எப்படியோ திருமணம் ஆனவர்கள் குழந்தை வேண்டும் என்று நினைத்தால் மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. 

காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? அது நல்லதா? காரணத்த தெரிஞ்சிக் கோங்க...

ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும் சில உணவுகள்.. கட்டாயம் தவிர்க்க வேண்டும்...Representative Image

சோயா உணவுகள்

ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஒன்று தான் சோயா உணவுகல். இவற்றை ஆண்கள் அதிகளவில் உட்கொண்டால் அவர்களின் ஹார்மோன்களில் அதிகளவு ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி பல பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். எனவே, எக்காரணத்திற்காகவும் சோயா உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்