Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Side Effects of Threading Eyebrows in Tamil: அழகா இருக்குனு அடிக்கடி திரெட்டிங் பண்ணுறிங்களா? அப்பா இந்த பிரச்சனையெல்லாம் சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க..

Nandhinipriya Ganeshan July 25, 2022 & 09:15 [IST]
Side Effects of Threading Eyebrows in Tamil: அழகா இருக்குனு அடிக்கடி திரெட்டிங் பண்ணுறிங்களா? அப்பா இந்த பிரச்சனையெல்லாம் சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க..Representative Image.

Side Effects of Threading Eyebrows in Tamil: பெண்கள் என்றாலே அழகு தான்! ஆனால் இருப்பது போதாதென்று தங்களை அழகு படுத்திக்கொள்வதற்காக என்னென்னமோ செய்கிறார்கள். அதில் ஒன்று தான் புருவ முடி எடுப்பது. இந்த த்ரெடிங் உலகம் முழுவதும் இனம் அல்லது நிறத்தைப் பொருட்படுத்தாமல் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த காலத்தில் புருவம் முடி எடுக்காத பெண்களே கிடையாது.

ஆனால், அழகு என்ற பெயரில் தங்களுடைய ஆரோக்கியத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். புருவ முடி எடுப்பதால் பின்னாளில் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியாமல் அடிக்கடி எடுத்துக் கொள்கிறார்கள். இந்த காலத்தில் பெண்கள் பலவிதமான சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாவதற்கு இதுவும் ஒரு காரணம்.

உங்களுக்கு தெரியுமா? நம்முடைய புருவத்தில் தான் பிராணன் இயங்கி வருகிறது. சில சமயங்களில் நீங்க சந்தித்திருக்கலாம், உங்க புருவ முடிகளை கையில் தொடும்போது உதிரும். இதற்கு நம் உடலில் உள்ள பிராணன்கள் குறைந்து வருகிறது என்று அர்த்தம். சிம்பிலாக சொன்னால் இறப்பு காலம் நெருங்கி வருகிறது என்று அர்த்தம்.

த்ரெட்டிங் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்:

பல பெண்கள் பார்லருக்கு சென்று புருவ முடியை எடுத்துக்கொள்கிறார்கள், ஒருசிலர் வீட்டிலேயே எடுத்துக்கொள்கிறார்கள்.

அப்படி புருவ முடிகளை எடுக்கும்போது கண்களை சுற்றியுள்ள வர்ம பகுதிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உடலில் பிராண சக்தி குறைய ஆரம்பிக்கிறது.

பிராண சக்தி குறைவதால் உங்களுடைய ஆயுட்காலம் குறைவதோடு, நீங்க பெற்றெடுக்கும் பிள்ளைகளின் ஆயுட்காலமும் குறைய வாய்ப்புள்ளது.

நம் கண்கள் சுற்றிலும் பல விதமான முக்கிய நரம்புகள் செயல்படுகின்றன. நாம் வலுக்கட்டாயமாக முடியை பிடுங்கும்போது, நரம்புகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால், உடலில் எரித்மா, ஃபோலிகுலிடிஸ், சூடோஃபோலிகுலிடிஸ், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் டிபிக்மென்டேஷன் போன்ற நாள்பட்ட நோய்கள் வரவும் காரணமாக அமையும்.

எனவே, இனி அந்த மாதிரியான தவறுகளை செய்யாமல், கண்களுக்கும் புருவங்களுக்கும் சுத்தமான விளக்கெண்ணையினை தினமும் இட்டு ஆயுட்காலத்தி நீடித்துக் கொள்ளுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்