Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Aloe Vera Gel at Home in Tamil: வீட்டிலேயே இயற்கையான கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி...?

Nandhinipriya Ganeshan June 18, 2022 & 12:00 [IST]
How to Make Aloe Vera Gel at Home in Tamil: வீட்டிலேயே இயற்கையான கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி...?Representative Image.

How to Make Aloe Vera Gel at Home in Tamil: கற்றாழையில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், கற்றாழை மிகவும் குளிர்ச்சியான பொருள் என்று நம் அனைவருக்குமே தெரியும். வீட்டில் வளர்க்கப்படும் கற்றாழை செடிகளில் அதிகளவு pH  இருக்கும். அதனால், பலர் ரெடிமேட் கற்றாழை ஜெல்லை வாங்கிப்பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதெல்லாம் கெமிக்கல் நிறைந்தவை இதனால் சருமம் பாதிக்கப்படும். 

எனவே, அதை தவிர்க்க வீட்டிலேயே கற்றாழை ஜெல்லை மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம். இப்போது இயற்கையான முறையில் கற்றாழை ஜெல்லை தயார் செய்வது (how to make aloe vera gel at home without gelatin) என்று பார்க்கலாம். 

மூன்று கற்றாழை இலைகள் மற்றும் ஒரு வைட்டமின் இ கேப்ஸூல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கேப்ஸூல் அனைத்து மெடிக்கல் கடைகளிலும் கிடைக்கும். முதலில் கற்றாழையை எடுத்து அதன் முற்களை கட்செய்துவிட்டு, 3 மணி நேரம் அப்படியே ஒரு தட்டில் வைத்துவிடுங்கள். இப்படி வைக்கும்போது கற்றாழையில் இருந்து ஒருவிதமான மஞ்சள் நிற திரவம் வெளியேறும். அனைத்து திரவமும் முழுமையாக வெளியான பிறகு கற்றாழையை நன்றாக தண்ணீரில் (how to make natural aloe vera gel)  கழுவி கொள்ளவும். 

சுத்தமாக கழுவிய பிறகு அதன் தோலை சீவி உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு வைட்டமின் இ கேப்ஸூலை மாத்திரையை உடைத்து ஊற்றி, நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அல்லது அரைக்காமலும் பயன்படுத்தலாம். அவ்வளதான் இயற்கையான கற்றாழை ஜெல் (how to make aloe vera gel thick) ரெடி.

இந்த ஜெல்லை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். தினமும் இதை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கம், இறந்த செல்கள் வெளியேறி சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என் ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


 

எந்த நேரமும் அழகா இருக்க… இத மட்டும் பண்ணுங்க…! பளிச்சினு இருப்பீங்க…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்