Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How To Remove Blackheads Permanently At Home: மூன்றே நாட்களில் முகத்தில் அசிங்கமா இருக்கும் கரும்புள்ளிகளை போக்க இத ட்ரை பண்ணுங்க..!!

Nandhinipriya Ganeshan June 27, 2022 & 14:00 [IST]
How To Remove Blackheads Permanently At Home: மூன்றே நாட்களில் முகத்தில் அசிங்கமா இருக்கும் கரும்புள்ளிகளை போக்க இத ட்ரை பண்ணுங்க..!!Representative Image.

How To Remove Blackheads Permanently At Home: கரும்புள்ளிகள் (Blackheads) என்பது இறந்த சருமம் மற்றும் எண்ணெயுடன் அடைபட்ட சருமத் துளைகள் தான். இது காற்றுடன் தொடர்பு கொள்வதன் மூலம் கருப்பு நிறமாக மாறுகிறது. பொதுவாக மூக்கு பகுதியில் தான் அதிகமாக காணப்படுகிறது. இது முகத்தின் அழகையே கெடுக்கும். இதற்காக பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் வலி மிகுந்ததாக இருப்பதோடு, அதிக பணமும் செலவிட வேண்டியிருக்கும். 

இந்த கரும்புள்ளிகளை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே அகற்றிவிட முடியும். இதற்காக அதிகம் பணம் செலவு செய்ய வேண்டியதும் கிடையாது. இயற்கை முறையில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம். 

கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியம்..

❖ முதலில் முகத்தை நன்றாக கழுவி கொள்ளவும், பின் முட்டையின் வெள்ளைப் பகுதியை பிளாக் ஹெட்ச் உள்ள இடத்தில் தடவி உலர விட வேண்டும். காய்ந்ததும் இரண்டாவது அடுக்காக மீண்டும் தடவும். அதுவும் காய்ந்த பிறகு மூன்றாம் முறையும் அப்ளை செய்யவும். இதன் 15 நிமிடங்கள் அப்படியே உலர விட வேண்டும். 15 நிமிடம் கழித்து அந்த வெள்ளைக் கரு நன்றாக காய்ந்திருக்கும் அதை அப்படியே உறித்தும் எடுக்கலாம் அல்லது ஒரு துணியில் வெதுவெதுப்பான தண்ணீரை நனைத்து அதை துடைத்தும் எடுக்கலாம். இதை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும். 

❖ தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், ஜோஜோபா எண்ணெய் 1 ஸ்பூன், சர்க்கரை 1 ஸ்பூன் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை வலியின்றி நீக்கிவிடலாம். 

❖ 3 டீஸ்பூன் சர்க்கரை பாகு எடுத்து அத்துடன் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் இரண்டையும் நன்றாக கலக்கி பிளாக் ஹெட்ஸ் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவி விடவேண்டும். இதை வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஆலிவ் ஆயில் இல்லையென்றால் பாதாம் ஆயில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்