Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

முகப்பொலிவு, முடி பராமரிப்பிற்கு தேயிலை எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?|How to use tea tree oil – for face and hair

Vaishnavi Subramani Updated:
முகப்பொலிவு, முடி பராமரிப்பிற்கு தேயிலை எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?|How to use tea tree oil – for face and hairRepresentative Image.

தினமும் காபி மற்றும் டீ செய்யப் பயன்படுத்தும் தூள், தேயிலை கொட்டையின் மூலம் தயார்செய்வதாக நாம் அறிவோம். ஆனால் தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்துவதால் நம் முகம் மற்றும் கேசத்திற்குப் பல நன்மைகள் உள்ளது. அப்படிப்பட்ட தேயிலை எண்ணெயை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

முகப்பொலிவு, முடி பராமரிப்பிற்கு தேயிலை எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?|How to use tea tree oil – for face and hairRepresentative Image

தேயிலை மர எண்ணெய்

 இந்த எண்ணெய் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டு பல நூறு வருடங்களாகப் பயன்பாட்டில் இருக்கும் எண்ணெய். இந்த எண்ணெய் பல நோய்களைச் சரிசெய்ய உதவும் ஆண்டிசெப்டிக் ஆகப் பயன்படுகிறது. இந்த எண்ணெய் மருத்துவ உலகில் அத்தியாவசியமான ஒரு எண்ணெய் வகையைச் சார்ந்தது எனக் கூறப்படுகிறது. இந்த எண்ணெய் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இத்தனை மருத்துவ குணம் பொருந்திய எண்ணெய்யை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பார்க்கலாம்.

பெண்களின் முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள், கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகள் இந்த எண்ணெய் பயன்படுத்துவதால் எளிதில் நீங்கும், சருமம் மற்றும் கேசத்திற்குப் பொலிவுடன் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.இந்த எண்ணெய்யை அதிகமாகவோ மற்றும்  நேரடியாகவோ பயன்படுத்தக்கூடாது. பின்வரும் வழிமுறைகளைக் கையாண்டு அதன்படி பின்பற்ற வேண்டும்.

முகப்பொலிவு, முடி பராமரிப்பிற்கு தேயிலை எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?|How to use tea tree oil – for face and hairRepresentative Image

தேயிலை எண்ணெய்யை முகத்திற்கு எப்படிப் பயன்படுத்துவது :

தேயிலை மர எண்ணெய், முகத்திற்கு இரண்டு வழிமுறைகளில்  பயன்படுத்தலாம். முகத்திற்கு இதனைப் பயன்படுத்துவதால் ஆரோக்கியமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

முதல் வழிமுறை:

  1. சுத்தமான பாலை பஞ்சில் எடுத்து முகத்தை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளவும். இதனைச் செய்வதன் மூலம் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை முழுமையாக வந்துவிடும்.

  2. அதன் பின், தேங்காய் எண்ணெய்யை மற்றும் தேயிலை மர எண்ணெயை இரண்டு முதல் மூன்று சொட்டுகள் அதில் சேர்த்து நன்றாகக் கலந்து கொண்டு முகத்தில் மென்மையாகத்  தேய்க்கவும். அதிகளவில் தேய்க்கக்கூடாது.

  3. எண்ணெய் தேய்த்த பிறகு 30 நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பின் முகத்தை ஈரத் துணியை வைத்து நன்றாகத் துடைத்துக் கொள்ளவும்.

முகப்பொலிவு, முடி பராமரிப்பிற்கு தேயிலை எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?|How to use tea tree oil – for face and hairRepresentative Image

இரண்டாம் வழிமுறை:

  1.  ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் முல்தானி மட்டி எடுத்துக் கொள்ளவும்.

  2. அதில் தயிர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். அதனுடன் மூன்று சொட்டுகள் தேயிலை மர எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தேய்த்துக்  கொள்ளவும். 

  3. எண்ணெய் தேய்த்து 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.அதன் பின், ஈரத் துணியைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்துக் கொள்ளவும்.

  4. இந்த இரண்டாம் வழிமுறையை இரண்டு முறை பயன்படுத்திய பிறகு முகத்தில் எரிச்சல் இல்லை என்றால் மட்டுமே அடுத்து பயன்படுத்த வேண்டும். தயிர் பயன்படுத்துவதால் தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் முகத்துக்கு மிகவும் நல்லது. அதனுடன் தேயிலை மர எண்ணெய் சேர்த்துப் பயன்படுத்துவதால் பல சரும நன்மைகளைத் தருகிறது. அதிக பலன் தருவதால் தினமும் பயன்படுத்தக் கூடாது. வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவது நல்லது.

முகப்பொலிவு, முடி பராமரிப்பிற்கு தேயிலை எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?|How to use tea tree oil – for face and hairRepresentative Image

தேயிலை எண்ணெய்யைத் தலையில் எப்படிப் பயன்படுத்துவது :

சருமத்திற்குத் தேயிலை மர எண்ணெய் எவ்வளவு நன்மையோ அதே போன்று கேசத்திற்கு நல்லது.

  1. முதலில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் மற்றும் தேயிலை மர எண்ணெய் இரண்டு சொட்டுகள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

  2. அத்துடன் வாசனைக்கு இரண்டு சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

  3. அதைத் தலையில் தேய்த்து சிறிது நேரத்திற்குப் பிறகு, தலைக்குப் பயன்படுத்தும் ஷாம்பூவுடன் ஒரு சொட்டு தேயிலை மர எண்ணெய் சேர்த்து நன்றாகத் தலையை அலசலாம். இதனால் எளிதில் தலையில் உள்ள பொடுகுப் பிரச்சனை தீரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்