Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இயற்கையான முறையில் சருமத்தை சுத்தம் செய்வது எப்படி ?|How to clean skin naturally?

Vaishnavi Subramani Updated:
இயற்கையான  முறையில் சருமத்தை சுத்தம் செய்வது எப்படி ?|How to clean skin naturally?Representative Image.

தினசரி வாழ்வில் வெயில், வாகனப் புகை மற்றும் பல காரணங்களால்  நம் முகமானது   வறட்சியடைகிறது. அது மட்டுமல்லாமல் முகத்தின் அழகை மெறுக்கேற்ற அதிகமான அழகுசாதன பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி கவலைக் கொள்ளமால் வாழ்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகள் சருமவறட்சி அதிகரிப்பு, சருமம் இயற்கை பொலிவுத்தன்மை குறைவு மற்றும்  கேசத்திற்கான ஆரோக்கியம் குறைத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனைக் குறைக்கவும் மற்றும் சருமம் பொலிவுறுவதற்கும், ஈரப்பதம் பெறுவதற்கும், இயற்கையான முறையில் சருமத்தைச் சுத்தம் செய்து பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதைப் பற்றி இந்த பதிவைப் பார்க்கலாம்.

சருமத்தைப் பாதுகாக்கவும் மற்றும் அழகுபெறுவதற்கும் சோப்பை விட, இயற்கையான முறையில் சுத்தப்படுத்துவதனால் (க்ளெண்ஸர்) சருமம் ஈரப்பதமானதாகவும் மற்றும் அழகு பெறுவதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மிகவும் உபயோகமானதாக அமையும். இதில், மூன்று வகையான சருமங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

இயற்கையான  முறையில் சருமத்தை சுத்தம் செய்வது எப்படி ?|How to clean skin naturally?Representative Image

1.சரும நிறத்தில் மாற்றம் இருப்பவர்களுக்கான இயற்கை முறையில் சுத்தப்படுத்துதல்

  • சரும நிறமாற்றத்தினால் இருப்பவர்களின் முகமானது நீர்ச்சத்து குறைந்து காணப்படும். அதனால் அதை இயற்கை முறையில் வீட்டிலே சரிசெய்து கொள்ளலாம்.

செய்முறை:

  • முதலில் தயிருடன், சிறிதளவு வெள்ளரிக்காய் சேர்த்து நன்றாக  க்ரீம் பதத்தில் மிக்சில் அரைத்துக் கொள்ளவும்.

  • அதை முகத்தில் அப்ளைச் செய்து நன்றாக மசாஜ் செய்யவும். பின் சில நிமிடங்கள் அப்படியே விடவும். அதன் பின் முகத்தைக் கழுவவும். இதைச் செய்வதன் மூலம் முகத்தில் இறந்த செல்களை நீக்கி,சருமம் பொலிவுறுவதுடன், சருமத்தில் ஈரப்பதம் நிலைத்து நிற்கும்.

இயற்கையான  முறையில் சருமத்தை சுத்தம் செய்வது எப்படி ?|How to clean skin naturally?Representative Image

2.எண்ணெய் சருமத்திற்கான இயற்கை முறையில் சுத்தப்படுத்துதல்

  • எண்ணெய் சருமத்திற்கு இயற்கை முறையில் சுத்தப்படுத்துவதைப் பார்க்கலாம். ஐம்பது மில்லியளவு எலுமிச்சை சாறு மற்றும் டிஸ்டில்டு வாட்டர் அல்லது மினரல் வாட்டர் ஜம்பது மில்லியளவு எடுத்துக் கொள்ளவும்.

  • இத்துடன் வைட்டமின் ஈ அடங்கியுள்ள எண்ணெய் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள்   விடவும்.

  • புங்கன் கோட்டையை ஊறவைத்து அந்த தண்ணீரை மேலே கூறப்பட்ட கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  • இந்த எண்ணெய்யை முகத்தில் தேய்த்து சிறிதுநேரம் கழித்துக் கழுவவும். இந்த எண்ணெய் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள பருக்கள் குறைவதைப் பார்க்கலாம்.

இயற்கையான  முறையில் சருமத்தை சுத்தம் செய்வது எப்படி ?|How to clean skin naturally?Representative Image

3.வறண்ட சருமத்திற்கான இயற்கை முறையில் சுத்தப்படுத்துதல்

  • பாதாம் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் இரண்டு எண்ணெயையும் ஒரே அளவில் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் வைட்டமின் ஈ உள்ள எண்ணெய் நான்கு சொட்டுகள் வரை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அந்த கலவையை ஒரு பாட்டிலில் சேமிக்கவும். 

  • இதனைப் பயன்படுத்துவதனால் சருமத்தில் உள்ள வறச்சி நீங்கி, பொலிவுறும். இதை சாதரண சருமம் உள்ளவர்கள் கூட பயன்படுத்துதலாம். 

இயற்கையான  முறையில் சருமத்தை சுத்தம் செய்வது எப்படி ?|How to clean skin naturally?Representative Image

முகத்தில் அணிந்திருக்கும் மேக்கப் இயற்கை முறையில் சுத்தப்படுத்துதல்

  • முதலில் புங்கன் கொட்டையை ஊறவைத்த தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்கு விர்ஜின் ஆலிவ் எண்ணெய் மற்றும் 100 மிலி டிஸ்டில்ட் வாட்டர் கலந்து கொள்ளவும்.

  • இந்த கலவையுடன் மூன்று சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அந்த கலவையை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  • இந்த எண்ணெய் மேக்கப் நீங்கப் பயன்படுத்தும் போது காட்டன் துணியில் சிறிதளவு இந்த எண்ணெய் சேர்த்து முகத்தில் தேய்த்து மேக்கப்பை நீங்கிக் கொள்ளலாம். இதன் மூலம்  சருமமானது பாதுகாப்பாகவும், ஆரேக்கியாமாகவும் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்