Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுவையான நாட்டுக்கோழி பிரியாணி குழையாமல் செய்வது எப்படி? 

Nandhinipriya Ganeshan September 07, 2022 & 18:20 [IST]
சுவையான நாட்டுக்கோழி பிரியாணி குழையாமல் செய்வது எப்படி? Representative Image.

Chicken Biryani Recipe in Tamil: பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதுவும் சிக்கன் பிரியாணி என்றால் கொல்லப் பிரியம். அதனாலையே, பிரியாணி பிரியர்கள் அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிட விரும்புவார்கள். என்னதான் வீட்டில் சமைத்தாலும் சில சமயங்கள் குழைந்துப்போய் கடைகளில் கிடைப்பது போன்று சுவையாக இருப்பது கிடையாது. இனி அந்த கவலையே வேண்டாம். சின்ன சின்ன ட்ரிக்ஸை பின்பற்றினாலே போதும் வீட்டிலேயே கடைகளில் கிடைக்கும் சுவையில் நாட்டுக்கோழியை வைத்து சூப்பரான பிரியாணி செய்யலாம். 

சுவையான செட்டிநாடு வெஜிடபிள் பிரியாணி இப்டி செஞ்சி பாருங்க…

தேவையான பொருட்கள்: 

நாட்டுக்கோழி - 1/2 கிலோ

பாசுமதி அரிசி - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)

தக்காளி - 2

பச்சைமிளகாய் – 2 

கொத்தமல்லி இலை – 2 கைப்பிடி அளவு 

புதினா – 2 கைப்பிடி அளவு  

இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் 

மல்லித்தூள் (தனியாத்தூள்) – 4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 1/2 டீஸ்பூன் 

மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் 

பட்டை – 2 துண்டு

கிராம்பு - 4

ஏலக்காய் – 3

பிரியாணி இலை – 4 

அன்னாசிப்பூ - 4

தயிர் -2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

மொறு மொறு சமோசா செய்வது எப்படி?

செய்முறை: 

முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் புதினா, கொத்தமல்லி இலை, பெருஞ்சீரகம் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். 

பின்னர், அடுப்பில் குக்கரை வைத்து சூடானது, நெய், 4 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, மற்றும் ஏலக்காய் போட்டு பொரியும் வரை கிளறவும். 

பின்னர், நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். அதோடு, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். 

தக்காளி நன்றாக வதங்கியதும், அரைத்த வைத்துள்ள விழுது, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் நாட்டுக்கோழி துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கி, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விடவும். 

பிரஷர் அடங்கியதும் திறந்து, ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியை கழுவி சேர்த்து சரியான அளவு தண்ணீர் ஊற்றி மூடி 2 இரண்டு விசில் விட்டு அடுப்பை அணைத்துவிடவும். அதிகமாக விசில் விடக்கூடாது. இல்லையெனில், பிரியாணி குழைந்துப் போய் விடும்.

இப்போது பிரஷர் அடங்கியதும் மூடியை திறந்து மெதுவாகக் கிளறிவிடவும். அவ்வளவு தான் சுவையான  நாட்டுக்கோழி பிரியாணி ரெடி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்