Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீபாவளிக்கு அசைவம் செய்ய மாட்டீங்களா… சுவையான செட்டிநாடு வெஜிடபிள் பிரியாணி இப்டி செஞ்சி பாருங்க…

Nandhinipriya Ganeshan October 23, 2022 & 12:00 [IST]
தீபாவளிக்கு அசைவம் செய்ய மாட்டீங்களா… சுவையான செட்டிநாடு வெஜிடபிள் பிரியாணி இப்டி செஞ்சி பாருங்க…Representative Image.

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, மற்றும் இறால் பிரியாணி எப்படியோ சைவ பிரியர்களுக்கு மஷ்ரூம் பிரியாணி, வெஜ் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி. அதுவும் செட்டிநாடு பிரியாணி என்றால் சுவையே தனி. ஆனால், அதற்காக எல்லா நேரமும் செட்டிநாட்டு ஹோட்டலுக்கு போக முடியாது அல்லவா. இதை நாம் காய்கறிகள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதாக எந்த சிரமமுமின்றி செய்து விடலாம். அதுமட்டுமல்லாமல், அசைவ பிரியாணிகளை செய்வதை விட இவை குறைந்த நேரமே செலவாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணப்படும் உணவான வெஜ் பிரியாணியை வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தீபாவளிக்கு அசைவம் செய்ய மாட்டீங்களா… சுவையான செட்டிநாடு வெஜிடபிள் பிரியாணி இப்டி செஞ்சி பாருங்க…Representative Image

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப் 

பெரிய வெங்காயம் - 2 

தக்காளி - 2 

கேரட் - 2 

பீன்ஸ் - 8 to 10 

காலிஃப்ளவர் - ¼ 

உருளைக்கிழங்கு - 1 

பச்சை பட்டாணி - ¼ கப் 

தயிர் - ¼ கப் 

பச்சை மிளகாய் - 2 

பூண்டு - 3 பல் 

இஞ்சி - 1 துண்டு

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மல்லி தூள் - 2 டீஸ்பூன்

பிரியாணி இலை - 2 

பட்டை - 1 துண்டு 

ஏலக்காய் - 3 

கிராம்பு - 3 

நட்சத்திர பூ - 1 

முந்திரி - 5

மிளகாய் தூள் - தேவையான அளவு 

நெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு 

புதினா - சிறிதளவு

தீபாவளிக்கு அசைவம் செய்ய மாட்டீங்களா… சுவையான செட்டிநாடு வெஜிடபிள் பிரியாணி இப்டி செஞ்சி பாருங்க…Representative Image

செய்முறை: 

அரிசியை நன்றாக கழுவி 1/2 மணி நேரம் ஊற வைத்து, சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், காலிபிளவர், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும். பச்சை பட்டாணியை உரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் அளவு நெய்யை ஊற்றி உருகியதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ, பட்டை ஆகியவற்றை போட்டு 1 நிமிடம் நன்றாக வதக்கவும்.

பின்னர், அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும். இப்போது இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.

பிறகு தக்காளியை போட்டு 2 நிமிடம் கிளறிவிட்டு, அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மற்றும் பச்சை பட்டாணியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

5 நிமிடத்திற்கு பிறகு அதில் 1/4 கப் அளவு தயிரை சேர்த்து 1 நிமிடம் கிளறிவிட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்துவிடவும். அதன்பின்பு, நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

இப்போது பாசுமதி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதில் சேர்த்து அதை பக்குவமாக கிளறி, ஒரு மூடி போட்டு ஆவி வந்ததும் விசிலை போட்டு ஒரு விசில் வரும் வரை அதை வேக விடவும். 

ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அப்படியே சுமார் 15 - 20 நிமிடம் வரை வைத்து, மூடியை திறந்து வெஜிடபிள் பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆனியன் ரைத்தா உடன் சுட சுட பரிமாறவும்.

தீபாவளிக்கு அசைவம் செய்ய மாட்டீங்களா… சுவையான செட்டிநாடு வெஜிடபிள் பிரியாணி இப்டி செஞ்சி பாருங்க…Representative Image

தீபாவளி சிறப்பு கட்டுரைகள்....!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! 

 

 

Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....! 


தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!

Representative Image.

 

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் சுவையான தேங்காய் லட்டு ரெடி..

Representative Image.

 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

Representative Image.

 

 

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்… அதுவும் தீபாவளி தினத்தில்... எங்கு தெரியுமா..?

Representative Image.

 

நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?

Death of Narakasura - Who controlled all the kingdoms on Earth

 

 

பிரமிக்க வைக்கும் தீபாவளி மேக்கப்ஸ்… இந்த தீபாவளிக்கு இப்படி டிரை பண்ணுங்க…

Representative Image.

 

 

தித்திக்கும் தீபாவளி வாழ்த்து படங்கள் மற்றும் கவிதைகள்..

Representative Image.

இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!

Representative Image.

உங்க பார்ட்னருக்கும், உங்களுக்கும் ஒரே டிசைன், கலர்ல… தீபாவளிக்கு அசத்துங்க…

Representative Image.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்