How to Make Sathu Maavu Kanji in Tamil: பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவுகளை கொடுக்க தொடங்கலாம். குறிப்பாக, சத்துமாவு கஞ்சி கொடுக்க வேண்டும். இந்த மாவில் அவ்வளவு நன்மைகள் இருக்கின்றன. வளரும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துச் சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. பொதுவாக குழந்தைகளுக்குகென்றே சத்து மாவு கடைகளில் விற்கப்படுகின்றன. இருந்தாலும், நாமே வீட்டில் தயாரித்து கொடுப்பது மிகவும் நன்மை பயக்கும். வாங்க.. சத்து மாவு கஞ்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம். அதற்கு முன், கஞ்சி செய்வதற்கு தேவையான மாவை தயார் செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
மக்காச் சோளம் - 1 கப்
கம்பு - 1 கப்
அரிசி - 1/2 கப்
வெள்ளை சுண்டல் - 1/2 கப்
கருப்பு சுண்டல் - 1/2 கப்
பச்சைப்பயறு - 1/2 கப்
பொட்டு கடலை - 1/2 கப்
நிலக் கடலை – ½ கப்
கோதுமை - 2 கப்
ராகி - 2 கப்
முந்திரி பருப்பு - 1/2 கப்
பாதாம் - 1/2 கப்
பிஸ்தா - 1/2 கப் (விரும்பினால்)
செய்முறை:
❖ முதலில் எல்லா பொருட்களை வாங்கி கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்துக் கொள்ளுங்கள்.
❖ பின்பு, அனைத்து பொருட்களையும் தனி தனியாக எண்ணெய் ஊற்றாமல் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
❖ முக்கியமாக தானியங்களை தீய விட கூடாது. பக்கத்திலேயே நின்று கவனமாக வறுக்கவும்.
❖ இப்போது அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
❖ வறுத்த அனைத்துப் பொருட்களையும் நன்றாக ஆற வைத்து, கடையில் கொடுத்து மிஷினிலும் அரைத்துக் கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே மிக்ஸியிலும் அரைத்துக் கொள்ளலாம்.
❖ மிஷினில் அரைக்கும் போது மாவு மிகவும் நைசாக இருக்கும், எனவே முடிந்த வரை மிஷினில் அரைத்துக் கொள்ளவும்.
❖ அரைத்த மாவை சலித்து காற்று புகாத, உலர்ந்த டப்பாவில் பாதுகாப்பான முறையில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
❖ அவ்வளவு தான் ஹெல்த்தியான சத்து மாவு (sathu maavu recipes in tamil) ரெடி..
சத்து மாவு கஞ்சி செய்வது எப்படி?
❖ முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டம்பளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
❖ தண்ணீர் கொதிப்பதற்குள், ஈரமில்லாத ஒரு பாத்திரத்தில் சிறிதளவு காய்ச்சிய பால் சேர்த்து அத்துடன் 2 ஸ்பூன் சத்து மாவு போட்டு கட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
❖ இப்போது, தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்துவிட்டு, நாம் கலந்து வைத்து சத்து மாவு கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தேவைப்பட்டால் அதில் ½ ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
❖ சத்து மாவில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து, கெட்டியாக இருக்கும் போது இறக்கினால், சத்து மாவு கஞ்சி ரெடி!!
குறிப்பு: கஞ்சியை நன்றாக வேக வைக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்கு வயிற்றாலை போகவும் வாய்ப்புண்டு. எனவே, கவனமா செய்யுங்க.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…