Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் சுவையான நட்ஸ் பாயசம்..

Nandhinipriya Ganeshan September 01, 2022 & 12:20 [IST]
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் சுவையான நட்ஸ் பாயசம்..Representative Image.

ஒரு சில குழந்தைகள் என்ன தான் சாப்பிட்டாலும் உடம்பில் தெம்பு இல்லாமல், சோர்வாகவே காணப்படுவார்கள். அவர்களுக்கு மருந்து, மாத்திரை வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக இந்த மாதிரியான ஆரோக்கிய உணவுகளை செய்துக் கொடுங்கள். பொதுவாக, குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் கொள்ள பிரியம். அதனால் இப்படி செய்து கொடுக்கலாம். இந்த நட்ஸ் பாயாசத்தை மாதத்திற்கு 3 மூன்று முறை செய்து கொடுப்பதன் மூலம் உடல் சோர்வு நீங்கி, ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். இதை குழந்தைகள் மட்டும் தான் குடிக்கவேண்டும் என்றில்லை. பெரியவர்களும் குடிக்கலாம். ஆனால், குழந்தைகளுக்கு மிதமான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்வது நல்லது. 

என்ன தேவை?

முந்திரி, பாதாம், திராட்சை, பிஸ்தா, பேரிச்சம்பழம் இந்த அனைத்து பொருட்களிலும் தனித்தனியாக உங்களுக்கு வேண்டிய அளவு (உதாராணமாக 20 கிராம்), ஆனால் சமஅளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

அதோடு, பால் - 1/2 லிட்டர், சர்க்கரை - 1/4 கப், ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன், சேமியா - 1/4 கப், நெய் - தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

முதலில் எல்லா நட்ஸ் வகைகளையும், பேரிச்சம் பழத்தையும் சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும். பின்னர், ஒரு வாணலியில் சிறிதளவு நெய்யை ஊற்றி காய்ந்ததும் பிஸ்தா, பாதாம், முந்திரி மூன்றையும் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதன்பின், அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு திராட்சையை வறுத்துக் கொள்ளவும். அடுத்து பேரிச்சம் பழம் மற்றும் சேமியா ஆகியவற்றையும் தனித்தனியாக நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

குறிப்பு: நட்ஸ் வகைகளை தவிர மற்ற மூன்று பொருட்களையும் தனியாக தனியாக தான் வறுக்க வேண்டும். 

இப்போது, மற்றொரு பாத்திரத்தில் பால் தன்ணீர் எதுவும் சேர்க்காம திக்காக திக்காக காய்ச்சிக் கொள்ளுங்கள். பால் நன்றாக கொதி வந்தவுடன் அதில் சேமியாவை சேர்த்து நன்றாக கிளறி, ஒரு மூடி போட்டு மூடிவிடுங்கள்.

சேமியா நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும். இப்போது நாம் வறுத்து வைத்துள்ள நட்ஸ் மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான ஆரோக்கியமான நட்ஸ் பாயாசம் தயார்.

Tags:

Nuts payasam recipe in tamil, how to make nuts payasam in tamil, dates and nuts kheer recipe, dry fruit payasam recipe, healthy kid drink recipes


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்