Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Herbal Henna for Hair at Home: கருமையான கூந்தலுக்கு வீட்டிலேயே ஹென்னா தயாரிப்பது எப்படி?

Nandhinipriya Ganeshan August 22, 2022 & 14:15 [IST]
How to Make Herbal Henna for Hair at Home: கருமையான கூந்தலுக்கு வீட்டிலேயே ஹென்னா தயாரிப்பது எப்படி?Representative Image.

How to Make Herbal Henna for Hair at Home: வயதாகும் போது மட்டுமே நரை ஏற்படும் என்ற நிலை மாறி இப்போது பொடுகு பிரச்சனை, முடி உதிர்வது போன்று இளநரை பிரச்சனையும் அதிகரித்துவருகிறது. இதற்கு உடலில் சத்துக்குறைபாடு உள்ளிட்ட காரணங்களும் உண்டு. அதனால், நம்மில் பலரும் இந்த நரை முடியை மறைப்பதற்காக கெமிக்கல் கலந்த ஹென்னா பயன்படுத்தி வருகிறோம். இது போன்ற கெமிக்கல் கலந்த ஹென்னா பயன்படுத்துவதால், அவை தீவிர முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 

ஆனால், இந்த பிரச்சனைகளை தடுப்பதற்காக வீட்டிலேயே இயற்கையான பொருட்களை கொண்டு தயாரித்து பயன்படுத்தலாம். இது நரை முடிக்கு ஒரு நல்ல தீர்வாக இருப்பதோடு, முடிக்கும் ஊட்டம் அளிக்கக்கூடியது. இப்போது, இயற்கையான ஹென்னா எப்படி தயார் செய்வது என்று இப்பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

வில்வ இலை பவுடர் - 1 டீஸ்பூன்

கரிசலாங்கண்ணி பவுடர் - 1 டீஸ்பூன்

நெல்லிக்காய் பவுடர் - 1 டீஸ்பூன்

மருதாணி இலை பவுடர் - 1 டீஸ்பூன்

முருங்கை விதை எண்ணெய் - 1 டீஸ்பூன்

செம்பருத்தி இலை பவுடர் - 1 டீஸ்பூன்

தயிர் - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மருதாணி இலை பவுடர், நெல்லிக்காய் பவுடர், வில்வ இலை பவுடர், கரிசலாங்கண்ணி பவுடர், மற்றும் செம்பருத்தி இலை பவுடர் அனைத்தையும் ஒரு இரும்புச்சட்டியில் எடுத்துக் கொள்ளவும். 

இவற்றுடன் தயிர், எலுமிச்சை சாறு, மற்றும் முருங்கை விதை எண்ணெய் மூன்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

கலக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்தும் கலக்கவும். ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது, ரொம்ப தண்ணியாகவும் இருக்கக்கூடாது. ஒரு நிலையான பதத்திற்கு கலக்கிக் கொள்ள வேண்டும். 

இந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டால், காலையில் பார்த்தால் நிறம் பழுப்பு நிறமாக மாறியிக்கும். 

இதை அப்படியே முடியில் தடவுவதை தவிர்த்து, முதலில் நல்லெண்ணெய்யையோ அல்லது தேங்காய் எண்ணெய்யையோ முடியில் தடவி அதன்பின் இந்த கலவையை அப்ளை செய்யவும்.

இதை பயன்படுத்துவதன் மூலம் நரை முடி மறைவதோடு, பேன், பொடுகு தொல்லையும் ஒழியும். 

Tags:

How to make herbal henna for hair at home, How to make natural black henna for hair at home, How to make henna for black hair at home, Black henna ingredients, Henna hair dye in tamil, Natural hair dye in tamil, How To Make Herbal Henna At Home


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்