Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Idly Biryani in Tamil: மீதமான இட்லியில் சுவையான பிரியாணி...!!

Nandhinipriya Ganeshan June 30, 2022 & 13:00 [IST]
How to Make Idly Biryani in Tamil: மீதமான இட்லியில் சுவையான பிரியாணி...!!Representative Image.

How to Make Idly Biryani in Tamil | How to Make Idly Biryani at Home  

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு:

ஏலக்காய் - 3

கிராம்பு - 3

இலவங்கப்பட்டை - 1

மற்ற பொருட்கள்:

இட்லி - 5

தக்காளி - 2 நறுக்கியது

பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட் கலவை - 3/4 கப்

வெங்காயம் நறுக்கியது- 1/2 கப் 

இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

ஆயில் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை - தேவைக்கு ஏற்ப

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

❖ முதலில் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய்  மூன்றையும் மிக்ஸியில் போட்டு கொறகொறப்பாக அரைத்து கொள்ளவும்.

❖ ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். 

❖ பின் நம்ப அரைத்து வைத்த அந்த மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.  அதில் நறுக்கிய காய்கறிகள், கரம் மசாலா, தக்காளி, மிளகாய் தூள், உப்பு ஆகிவற்றை சேர்க்கவும். 

❖ குறிப்பு: காய்கறிகளை முதலில் போட்டு வெந்தவுடன் பிறகு மற்ற பொருட்களை சேர்க்கவும். 

❖ இவற்றையெல்லாம் நன்றாக வதக்கி, ஒரு மூடி கொண்டு மூடிவிடுங்கள். இதை மிதமான தீயில் 5 நிமடங்கள் வரை வேக விடவும். 

❖ பின்னர் இட்லியை சேர்க்கவும். இட்லியை அப்படியே சேர்க்க கூடாது. சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தான் போட வேண்டும். இதை 3 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கி, தீயை அனைத்து விடுங்கள். 

❖ இப்போது நறுக்கிய கொத்தமல்லி இலையை மேலே தூவி சூடாக ரைதாவுடன் பரிமாறவும். 

இதையும் படிக்கலாமே: இட்லி மீதமாயிடிச்சா? இப்படி செஞ்சிப் பாருங்க... 10 நிமிசத்துல மொறுமொறு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்..!!

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்