Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Instant Curd at Home: இனி கெட்டியான தயிருக்கு 8 மணி நேரம் வெயிட் பண்ண தேவையில்ல.... அரை மணி நேரமே போதும்....!!

Nandhinipriya Ganeshan June 18, 2022 & 10:00 [IST]
How to Make Instant Curd at Home: இனி கெட்டியான தயிருக்கு 8 மணி நேரம் வெயிட் பண்ண தேவையில்ல.... அரை மணி நேரமே போதும்....!!Representative Image.

How to Make Instant Curd at Home: இப்போதெல்லாம் தயிர் வேண்டுமென்றால் உடனே கடைக்கு போய் பத்து ரூபாய் தயிர் பாக்கெட் வாங்கி கொள்கின்றோம். என்னதான் கடையில்  வாங்கி சாப்பிட்டாலும், வீட்டில் பசும்பால் வாங்கி காய்ச்சி தயிர் போட்டு இயற்கையான முறையில் துவந்த தயிரின் சுவையும் ஆரோக்கியமும் கிடைக்குமா? கடையில் விற்கப்படும் தயிர் அனைத்தும் வெறும் பால் பவுடர் என்று நமக்கு தெரியும், இருந்தாலும் உடனே வேண்டுமே என்று கடையில் வாங்க கட்டாயம் வந்துவிடுகிறது. குறிப்பாக, வீட்டு விசேஷங்களில் பரபரப்பில் தயிர் போடுவதற்கு பெண்கள் மறுந்துவிடுவார்கள். புதியதாக தயிர் போட்டால் எப்படியும் கிட்டத்தட்ட எட்டு மணி நேரமாவது வேண்டும். அதிலும் வெயில் காலமாக இருந்தால் கூட பரவாயில்லை. குளிர் அல்லது மழைக்காலம் என்றால் சுத்தம்.

ஆனால், இனி கவலை வேண்டாம் வெறும் அரை மணி நேரத்தில் ஃபிரஸான, கெட்டி தயிர் தயார் செய்து விடலாம். இப்போது அரை மணி நேரத்தில் பாலை காய்ச்சி உறைய வைத்து கெட்டியான இன்ஸ்டண்ட் (ketti thayir seivathu eppadi) தயிர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

அரை லிட்டர் பாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப்போது தான் தயிர் கெட்டியாக கிடைக்கும். காய்ச்சிய பாலை சற்று ஆற வைத்து, அதை உறை போடுவதற்காக ஒரு சில்வர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் வாழை இலையை பாத்திரம் வடிவில் வெட்டி உள்ளே போட்டு விடுங்கள். பின்னர், வாழை இலைக்கு மேல் காய்ச்சின பாலை ஊற்றி அதில் 3 டேபிள் ஸ்பூன் அளவு உறை மோரை ஊற்றி நன்றாக கலந்துவிடுங்கள். இப்போது பாத்திரத்தை ஒரு தட்டு கொண்டு மூடிவிடுங்கள். அவ்வளவு தான் இதை அரை மணி நேரத்தில் தயிராக மாற்ற போகிறோம். 

இப்போது, அகலமான ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர், கொதிக்கும் தண்ணீருக்கு மேல், நாம் உறைபோட்ட தயிர் பாத்திரத்தை வைத்து இட்லி பாத்திரத்தின் மேல் தட்டை போட்டு மூடி வையுங்கள். இதை ஒரு அரை மணிநேரத்திற்கு அப்படியே மிதமான தீயில் இருக்கட்டும்.  

அரை மணி நேரத்திற்கு பின் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை வெளியே எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் விட்டு எடுத்துப் பாருங்கள்.  அவ்வளவு தான்.  கெட்டியான வெண்மையான தயிர் ரெடியாகி (thayir seivathu eppadi tamil) இருக்கும். இதில் புளிப்பு சுவை இருக்காது. உங்களுக்கு புளிப்பு வேண்டுமென்றால், சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது புளிப்பு தயிரை சேர்த்துக் கொண்டாலும் புளிப்பு சுவை வந்துவிடும். அவ்வளவு தாங்க.. கெட்டித்தயிருக்காக இனி 8 மணி நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டும் என்று கிடையாது. 


வாங்குன காசுக்கு காய்கறிகளை இப்படி பராமரித்தால் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷா இருக்கும்


உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என் ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்