Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தைகளுக்கு பிடித்த ஒரு இனிப்பான ரெசிபி சக்கரவள்ளிகிழங்கு கேசரோல் செய்வது எப்படி?

Vaishnavi Subramani Updated:
குழந்தைகளுக்கு பிடித்த ஒரு இனிப்பான ரெசிபி சக்கரவள்ளிகிழங்கு கேசரோல் செய்வது எப்படி?Representative Image.

பள்ளி விடுமுறை நாட்கள் ஆரம்பிக்க உள்ள நிலையில்,  குழந்தைகள் தினமும் ஒரு ஸ்நாக்ஸ் வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்களுக்குச் சத்தாகவும் பிடித்த மாதிரியும் சலிக்காமல் சாப்பிடுவதற்கு ஒரு ரெசிபி செய்தால் எப்படி இருக்கும். குழந்தைகளுக்கு ஒரு புதுவிதமான மற்றும் சுவையான இனிப்பான ஒரு ரெசிபி செய்யவேண்டும் என யோசிக்கிறீர்களா.

முழுவதுமாக சத்து நிறைந்த பொருள்கள் வைத்து ஒரு இனிப்பான ரெசிபி. இந்த பதிவில் குழந்தைகளுக்கு இனிப்பான சக்கரவள்ளிகிழங்கு கேசரோல் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

சக்கரவள்ளிகிழங்கு– 450 கிராம்

நாட்டுச் சர்க்கரை – 1/2கப்

வெண்ணெய் -1/2கப் (உப்பு உள்ள வெண்ணெய்)

வெண்ணிலா சாஸ் – 1/2ஸ்பூன்

பெக்கன்கள் – 3/4கப்

உப்பு – சிறிதளவு

இலங்கப்பட்டை பொடி – 1 ஸ்பூன்

ஜாதிக்காய் பொடி – 1/4ஸ்பூன்

மினியேச்சர் மார்ஷ்மெல்லோஸ் – 2 கப்

செய்முறை

முதலில் சக்கரவள்ளிகிழங்கை எடுத்து அதை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவிற்குத் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். அதை 10 முதலில் 20 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

சக்கரவள்ளிகிழங்கு வெந்த உடன் எடுத்து அதன்மேல் உள்ள தோல் நீக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக மசிக்கவும்.

மசித்த கிழங்கு உடன் அரை கப் அளவிற்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாகப் பிசையவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.

அதில் அரை கப் அளவிற்கு உப்பு சேர்த்த வெண்ணெயை  சேர்த்து நன்றாகப் பிசையவும். பெக்கன்கள் எடுத்து பொடிப்பொடியாக உடைத்து அல்லது நறுக்கிக் கொள்ளவும்.

வெண்ணெய் கலக்கிய கலவையில் அரை ஸ்பூன் அளவிற்கு வெண்ணிலா சாஸ் மற்றும் கால் ஸ்பூன் அளவிற்கு ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்றாகப் பிசையவும்.

அதில்  ஒரு ஸ்பூன் அளவிற்கு இளங்காய் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். அதில் கால் ஸ்பூன் அளவிற்கு ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்றாக பிசையவும்.

அது கேக்கிற்கு தயாரிக்கும் மாவு பதத்திற்கு வரும் வரை  நன்றாக பிசைந்து கொள்ளவும்.    

 கேக் பேன் எடுத்து அதில் முழுவதுமாக வெண்ணெய் தேய்த்துக் கொள்ளவும்.

அதில் நறுக்கிய பெக்கன்களை எடுத்து அதில் பாதி அளவிற்கு கேக் பேன்னில் சேர்த்து அதற்கு மேல் கலந்து வைத்த கேக் கலவையைச் சேர்க்கவும்.

அதற்கு மேல் மீதமுள்ள பெக்கன்கள் சேர்த்து அத்துடன் இரண்டு கப் அளவிற்கு  மினியேச்சர் மார்ஷ்மெல்லோஸ் சேர்த்துக் கொள்ளவும்.

இதை ஓவனில் வைத்து 25முதல் 30 நிமிடங்கள் வரை வைத்து வேக வைக்க வேண்டும். 30 நிமிடங்கள் வெந்த பின், அதை எடுத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றினால் சூடான மற்றும் சுவையான சக்கரவள்ளிகிழங்கு கேசரோல்  ரெசிபி தயார். 

இதை பிரிட்ஜில் வைத்து, மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வைத்துச் சாப்பிடலாம். தேவைப்படும் போது எடுத்து சிறிது நேரம் சூடு செய்து சாப்பிடலாம். இதைக் குழந்தைகளுக்கு எவ்வளவு வேண்டும் ஆனால் கொடுக்கலாம். இதில் அனைத்து பொருள்களிலும் சத்துகள் நிறைந்து உள்ளது. இதில் மினியேச்சர் மார்ஷ்மெல்லோஸ் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் ஒரு ரெசிபியாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்