Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் லிஸ்டில் ஸ்மார்ட் நெக்லஸ்….!

Gowthami Subramani July 24, 2022 & 12:20 [IST]
ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் லிஸ்டில் ஸ்மார்ட் நெக்லஸ்….! Representative Image.

Smart Necklace Benefits in Tamil: உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் வகையில் “ஸ்மார்ட் நெக்லஸ்” என்ற புதிய டெக்னாலஜியை கண்டுபிடித்துள்ளனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.

எப்படி கண்டுபிடிப்பது?

ஒருவரின் உடலில் இருந்து உருவாகும் வியர்வை மூலம், ஒருவரின் ஆரோக்கியத்தைக் கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், ஸ்மார்ட் நெக்லஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஆரோக்கியத்தைக் கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து சேஎபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, பேட்டரி இல்லாத Wireless Smart Necklace என்பதை நிரூபித்துள்ளது. இதனை உயிர்வேதியியல் சென்சார் என்று கூறுவர்.

பயன்கள்

இந்த உயிர் வேதியியல் சென்சாரை பயன்படுத்தி மனிதனின் இரத்த சர்க்கரை அளவு அல்லது குளுக்கோஸ் அளவைக் கண்காணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதனை ஒருவர் அவர்களது கழுத்தில் ஒரு முறை வைக்கப்பட்டு ஆய்விற்காக உடற்பயிற்சி செய்யும் போது குளுக்கோஸின் அளவை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த உயிர்வேதியியல் சென்சார் எனப்படும் இது சென்சார் பேட்டரிக்குப் பதிலாக அதிர்வு சுற்றுகளைப் பயன்படுத்தி செயல்படும். External Reader System-லிருந்து வெளிவரும் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்தி இது பிரதிபலிக்கிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் டிஜிட்டல் முறையான தொழில்நுட்பங்கள், அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. பயோசென்சார்கள் உடலின் உள்ளுணர்வுகளைக் கண்டறியப்படுவதாக அமைகிறது. அதன் படி, ஒரு நபரின் உடல் திரவங்களில் உள்ள முக்கிய தகவல்களைக் கண்டறிய முடியும்.

பயோ மார்கெர்ஸ்

உடலின் ஆழமான இரகசியங்களை வெளிப்படுத்தக்கூடிய நோய், தொற்று, உணர்ச்சி போன்றவற்றிற்கான சான்றுகள் ஒரு நபரின் உடல் திரவங்களில் காணப்படுகின்றன. இவற்றில் உடல் திரவங்களைக் குறிப்பிடுவது கண்ணீர், உமிழ்நீர், சிறுநீர், வியர்வை உள்ளிட்டவையாகும். இந்த சென்சார் மூலம் வியர்வையின் கலவையை பகுப்பாய்வு செய்யலாம். மேலும், இதனைத் தனிப்பயனாக்கப்பட்டு ஹார்மோன்களைக் கண்டறியப் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவும் எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் நெக்லஸ்-ஐப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் சென்சார் குறைந்த அளவிலான வியர்வை மட்டுமே தேவைப்படும். நெக்லஸைப் போன்ற தோற்றத்துடன் மெல்லிய பொருள்களால், இந்த ஸ்மார்ட் நெக்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது தோல் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும் பயன்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்