Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Winter Special Drink: அடிக்கிற குளிருக்கு சூடான மசாலா சாக்லேட் ரெசிபி.. இப்டி செஞ்சி பாருங்க.. வித்தியாசமான ட்ரை.. 

Nandhinipriya Ganeshan November 21, 2022 & 14:49 [IST]
Winter Special Drink: அடிக்கிற குளிருக்கு சூடான மசாலா சாக்லேட் ரெசிபி.. இப்டி செஞ்சி பாருங்க.. வித்தியாசமான ட்ரை.. Representative Image.

குளிர்காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் விரைவில் உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது. எனவே, இந்த காலத்தில் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக சூடான ட்ரிங்க்ஸ் குடிக்கலாம். அந்தவகையில், வித்தியாசமான முறையில் சூடான மசாலா சாக்லேட் எப்படி செய்து பார்க்கலாம். இது சாக்லேட் குடித்த அனுபவும் இருக்கும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். 

தேவையான பொருட்கள்:

2 கப் பால்

4 ஏலக்காய் 

4-5 கிராம்பு

1-2 பெரிய இலவங்கப்பட்டை 

4 டீஸ்பூன் இனிக்காத கோகோ பவுடர்

2 டீஸ்பூன் சர்க்கரை

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பால், ஏலக்காய், இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். இந்த சமயத்தில், பக்கத்தில் இருந்தே கண்காணிக்க வேண்டும். ஏனென்றால், பால் கொதிக்கத் தொடங்கும் முன்பே தீயை குறைக்க வேண்டும்.

அதாவது, பால் கொதிக்க ஆரம்பிக்கும் முன்பே, தீயை குறைத்து, மூடியை வைத்து 2-3 நிமிடங்கள் லேசாக கொதிக்கவிட வேண்டும்.

இப்போது மிதமான தீயில் வைத்துக்கொண்டு கோகோ பவுடர் மற்றும் சர்க்கரை இரண்டையும் சேர்த்து, நன்றாக கலக்கி இறக்கினால் சூடான மசாலா சாக்லேட் ரெடி. 

இதை வடிகட்டி அடிக்கும் குளிருக்கு சூடாக குடித்தால் சூப்பராக இருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்