Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடைகளில் விற்கும் பாவ் பாஜி வீட்டிலேயே செய்வது எப்படி? | How to make pav bhaji at home?

Vaishnavi Subramani Updated:
கடைகளில் விற்கும்  பாவ் பாஜி  வீட்டிலேயே செய்வது எப்படி? | How to make pav bhaji at home?Representative Image.

தினத்தோறும் மாலைவேளைகளில் கடைகளில் துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. கடைகளில் சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதனால், வீட்டிலேயே சூடான சுவையான உணவுப் பொருள்களைச் செய்து சாப்பிடலாம். அதன் படி, வீட்டிலேயே செய்யக் கூடிய ஒரு உணவைப் பற்றி பார்க்கலாமா. அது தான் நம் எல்லோருக்கும் பிடித்த பாவ் பாஜி. சரிவாங்க கடைக்கு  செல்லாமல் வீட்டிலேயே பாவ் பாஜி செய்வது எப்படி என்பதை இங்குப் பார்க்கலாம்.

கடைகளில் விற்கும்  பாவ் பாஜி  வீட்டிலேயே செய்வது எப்படி? | How to make pav bhaji at home?Representative Image

பாவ் பாஜி செய்யத் தேவையான பொருட்கள்

பாவ் பன் - 4 பன்

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உருளைக்கிழங்கு - பெரிய 4 கிழங்கு

கேரட்,பீன்ஸ்,பச்சைப் பட்டாணி - தேவையான அளவு

குட மிளகாய் - 1

வெங்காயம் - 1 

தக்காளி - 4

பாவ் பாஜி மசாலா - 3 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - சிறிதளவு

எலுமிச்சை சாறு - சிறிதளவு

கொத்தமல்லி தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

கடைகளில் விற்கும்  பாவ் பாஜி  வீட்டிலேயே செய்வது எப்படி? | How to make pav bhaji at home?Representative Image

பாவ் பாஜி தயார் செய்யும் முறை

1.ஒரு பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

2.மற்றொரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு இரண்டு இரண்டாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.

3.காய்ந்த மிளகாயை வெந்நீரில் ஊரவைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

4.குட மிளகாய், வெங்காயம், தக்காளி  மற்றும் கொத்தமல்லித் தழை ஆகியவை தனித்தனியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடைகளில் விற்கும்  பாவ் பாஜி  வீட்டிலேயே செய்வது எப்படி? | How to make pav bhaji at home?Representative Image

5.வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் (கேரட்,பீன்ஸ்,பச்சைப் பட்டாணி)  நன்றாக மசித்துக் கொள்ளவும்.

6.முதலில் வாணலியில் வெண்ணெய் சேர்த்து நன்றாகச் சூடானப் பிறகு, அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

7.அதனுடன் மசித்த காய்கறிகளைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அதன் பிறகு, பாவ் பாஜி மசாலா மற்றும் அரைத்த மிளகாய் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.

8.அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

கடைகளில் விற்கும்  பாவ் பாஜி  வீட்டிலேயே செய்வது எப்படி? | How to make pav bhaji at home?Representative Image

9.தண்ணீர் வற்றி கிரேவி பதத்திற்கு வந்ததும், அத்துடன் வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

10.தவாவில் வெண்ணெய் சேர்த்து பாவ் பண்களைப் போட்டு இருபுறமும் நன்றாக டோஸ்ட் செய்து இறக்கவும்.

11.பாவ் பாஜி மசாலா கலவையுடன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அந்த கலவையுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் வெங்காயம் தூவி பன்களுடன் சேர்த்தால் சூடான சுவையான பாவ் பாஜி தயார். இதனை சூடாகப் பரிமாறலாம்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்