Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vinagayar Chaturthi Special Recipes: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. பிள்ளையாருக்குப் பிடித்த 'மோத்திசூர் லட்டு' ..

Nandhinipriya Ganeshan September 07, 2023 & 12:00 [IST]
Vinagayar Chaturthi Special Recipes: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. பிள்ளையாருக்குப் பிடித்த 'மோத்திசூர் லட்டு' ..Representative Image.

Motichoor Laddu Recipe in Tamil: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை வந்துவிட்டது. அனைவரும் வீட்டில் விநாயகருக்கு பிடித்த பல இனிப்பு பலகாரங்களை செய்ய தயாராகிக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி என்றாலே மோதகத்திற்கு அடுத்து நம் நினைவுக்கு வருவது லட்டு தான். விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் ஒரு இனிப்பு பலகாரங்களில் இந்த "மோத்திசூர் லட்டு" ஐ வீட்டிலேயே மிகவும் சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

❖ முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் அளவு சர்க்கரையை போட்டு, அதில் தண்ணீர் 3 கப் ஊற்றி, நன்றாக உருக வைத்துக் கொள்ளவும். பின் அதில் 2 டீஸ்பூன் அளவிற்கு பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

❖ 5 நிமிடம் கழித்து மேலே நுரை போல் வரும். அந்த நேரத்தில் 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து, நிறத்திற்கு கேசரிப் பவுடர் கொஞ்சமாக சேர்த்து, நன்கு கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக சேர்த்தாலே அதிக நிறத்தை தரக்கூடியது கேசரி பவுடர் எனவே, பார்த்து கவனமாக போட வேண்டும். இப்போது பாகு ரெடி.

Most Read: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. தேன் கொழுக்கட்டை 

❖ பூந்தி செய்வதற்கு, மற்றொரு பாத்திரத்தில் 2 கப் கடலை மாவையும், 1/2 லிட்டர் பாலையும் ஊற்றி கட்டி இல்லாமல் மென்மையாக கரைத்துக் கொள்ளவும். பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 - 3 கப் நெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு ஓட்டையாக இருக்கும் கரண்டியை எடுத்து, அதன் ஓட்டையில் நாம் கரைத்து வைத்திருந்த கடலை மாவு கலவையை ஊற்றவும். 

❖ நீங்க ஊற்ற ஊற்ற மாவு துளி துளியாக எண்ணெயில் விழுந்து, பூந்தி போன்று பொரியும். அதை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதேபோல் மீதமுள்ள மாவையும் பூந்தி பொரித்து எடுத்துக் கொள்ளவும். பூந்தி ரெடி.

❖ இப்போது, பொரித்து வைத்துள்ள பூந்தியை தட்டில் போட்டு, அதன் மேல் வெதுவெதுப்பான சர்க்கரை பாகுவை ஊற்றி பரப்பி விடுங்கள். பின்பு, அதை லட்டு போன்று சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் பாதாம், பிஸ்தாவை வைத்து அலங்கரித்தால், சுவையான மோத்திசூர் லட்டு நைவேத்தியம் படைக்க தயார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்