Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Swine Flu Symptoms in Tamil: பன்றி காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்...

Nandhinipriya Ganeshan August 22, 2022 & 15:00 [IST]
Swine Flu Symptoms in Tamil: பன்றி காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்...Representative Image.

Swine Flu Symptoms in Tamil: பருவ நிலைக்கு ஏற்ப டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல், எலி காய்ச்சல் என்று புதிது புதிதாக தோன்றும். அப்படி பருவநிலை காலங்களில் சமீப காலமாக பரவிவரும் காய்ச்சலில் ஒன்று தான் ஃப்ளூ காய்ச்சல் எனப்படும் பன்றி காய்ச்சல். இந்த காய்ச்சல் முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு தான் கண்டறியப்பட்டது. 'ஸ்வைன் இன்ஃப்ளூயென்சா' என்ற வைரஸால் ஏற்படும் இந்த நோயானது, நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் பிற சுவாசப் பிரச்சனைகள் போன்ற சில தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் அறிகுறிகளையும் தொற்றுநோய்க்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

Also Read: 'மெட்ராஸ் ஐ' நோய் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்

எப்படி பரவுகிறது?

பொதுவாக, இத்தொற்றானது மழைக்காலம், குளிர்காலங்களில் அதிகமாக பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் மூக்கு, தொண்டை, நுரையீரலில் உள்ள செல்களை தான் முதலில் பாதிக்கிறது. 

அதுமட்டுமல்லாமல், இந்த வைரசானது பாதிக்கப்பட்ட ஒரு நபரின் தும்மல் அல்லது இருமலில் இருந்து வரும் நீர்த்துளிகள் அல்லது அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களில் பயன்படுத்தும்போது இந்நோயானது எளிதில் மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது. 

Also Read: ஐய்யோ.. ஆந்த்ராக்ஸ் நோயின் அறிகுறிகள் இப்படி தான் இருக்குமா?

அறிகுறிகள் எப்படி இருக்கும்?

இந்த காய்ச்சல் உடலில் பரவியதும்,

  • சளி
  • அதிக காய்ச்சல்
  • மூச்சு திணறல்
  • தொண்டை வலி
  • தலைவலி
  • உடல் சோர்வு
  • வாந்தி 
  • வயிற்றுப்போக்கு 
  • சிவந்த கண்கள்

போன்ற அறிகுறிகள் தென்படும். 

Also Read: குரங்கு அம்மை நோய் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்..

தடுப்பு முறைகள்:

சாதாரண காய்ச்சல் ஐந்து நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். ஏனென்றால் தீவிரமாகும் போது குணப்படுத்துவது சற்று சிரமம். 

காற்று மூலம் எளிதில் பரவும் நோய் என்பதால், நோயால் பாதித்திவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தூரம் தள்ளியே இருக்க வேண்டும். 

வெளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் முகம், கழுத்து, கை, கால் பகுதிகளை சுத்தமான நீரில் சோப்பு நன்றாக கழுவ வேண்டும்.

வெளியில் செல்லும் போது முகமூடி அணிந்து செல்லவும்.

காய்ச்சல் அறிகுறிகள் லேசாக இருந்தால் நிலவேம்பு கசாயம் குடிக்க ஆரம்பித்து விடுங்கள்.

Also Read: இதய நோய் வராமா இருக்க இத குடிங்க..

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்:

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது.

முகக் கவசம் அணிய வேண்டியது அவசியம்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் குறிப்பிட்ட இடைவெளியில் கைகளை நன்றாக மற்றும் அடிக்கடி கழுவ வேண்டும்.

இருமல், தும்மல் ஏற்படும் போது கைக்குட்டைகளை பயன்படுத்துவது அவசியம்.

தண்ணீர், சூடான சூப்கள், பழங்கள், காய்கறி ஜூஸ் போன்ற திரவங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

இன்ஃப்ளூயென்சா வைரஸ்களில் பல வகை உண்டு. எனவே, எந்த வகையான வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து அதற்கேற்ற தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது அவசியம். 

Tags:

Pandri kaichal symptoms in tamil, Swine flu, swine flu symptoms in tamil, swine flu symptoms in human body, how swine flu spread in humans, symptoms of swine flu in humans, swine fever symptoms  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்