Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Use Drumstick Leaves Powder in Tamil: ஞாபக சக்தி அதிகமாகனுமா? முருங்கை கீரையை இப்படி சாப்பிடுங்க..!!

Nandhinipriya Ganeshan July 27, 2022 & 10:15 [IST]
How to Use Drumstick Leaves Powder in Tamil: ஞாபக சக்தி அதிகமாகனுமா? முருங்கை கீரையை இப்படி சாப்பிடுங்க..!!Representative Image.

How to Use Drumstick Leaves Powder in Tamil: முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. அதிலும், முருங்கை இலை, பூ மற்றும் காய் மட்டுமே அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தபடுகிறது. பொதுவாக, உடலுக்கு நன்மை தரும் அனைத்து உணவுகளுமே அதிகம் வேலை எடுக்கும். முருங்கை இலையும் அப்படிதான், இவை மிகவும் சிறியதாக இருப்பதால், அதை சுத்தம் செய்து சமைப்பதற்கு மிகவும் பொறுமை தேவை. இதற்கு சலுப்புப்பட்டு கொண்டு பலரும் இந்த கீரையை செய்வது கிடையாது. அப்படிப்பட்டவர்கள் முருங்கை கீரை பொடியை தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

முருங்கை கீரை பொடியின் பயன்கள்:

❖ இரத்த ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது

❖ முருங்கை பொடியை சேர்த்துக்கொள்வதால் கல்லீரல் பிரச்சனையே வராது.

❖ நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான பிரச்சனையை போக்கி, ஆரோக்கியமான குடல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

❖ மாதவிடாய் காலத்தில் சுறுசுறுப்பாகவும் அதிக ஆற்றலுடனும் செயல்பட உதவுகிறது.

❖ இரத்த அழுத்தத்தை போக்கி இருதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

❖ அல்சைமர் நோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

❖ சருமத்தை மினுமினுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

❖ சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. தினமும் முருங்கை பொடியை சேர்த்துக்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

❖ அடிக்கடி மறதி ஏற்படுபவர்கள் தினமும் தவறாமல் இந்த பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் ஞாபக சக்தி அதிகரித்து மறதி ஏற்படாது.

❖ இதில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின், தாதுக்கள் மூளை ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

முருங்கை கீரை பொடி இப்படி அரைச்சி பாருங்க..!!

எப்படி சாப்பிடலாம்? 

❖ இரண்டு டம்ளர் தண்ணீரில், 2 ஸ்பூன் முருங்கைப் பொடி, 2 ஸ்பூன் சீரகப்பொடி, 1 ஸ்பூன் மிளகு தூள் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, சூப் மாதிரியும் குடிக்கலாம்.

❖ தோசை சுடும்போது மிளகு பொடி, இட்லி பொடிக்கு பதிலாக இந்த முருங்கைக் கீரை பொடியை தூவி சாப்பிடலாம்.

❖ பருப்பு குழம்பு வைக்கும்போது அதில் முருங்கை காய்க்கு பதிலாக 3 ஸ்பூன் முருங்கைக் கீரை பொடியை சேர்த்து கொள்ளலாம்.

இப்படி முருங்கை கீரை பொடியை பலவிதமாக சேர்த்துக் கொள்ளலாம்.

Tags:

Drumstick leaves powder uses in tamil | Drumstick leaves powder benefits in tamil | Drumstick leaves powder recipe in tamil | How to use drumstick leaves powder in tamil | How to use drumstick leaf powder in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்