Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்க குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமா? நேந்திர பழத்தை இப்படி சாப்பிட குடுங்க...!!

Nandhinipriya Ganeshan August 26, 2022 & 10:20 [IST]
உங்க குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமா? நேந்திர பழத்தை இப்படி சாப்பிட குடுங்க...!!Representative Image.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடும் பழம் வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உள்ளன. அவற்றில் சில நோயை தடுக்கும் மருந்தாகவும் செயல்படுகின்றன, சிலவற்றில் அதிகபட்சமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அவ்வகையில், சத்துநிறைந்த பழங்களில் ஒன்றான நேந்திரபழம் குழந்தைகளுக்கு எந்த வகையில் மருந்தாகிறது என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த நேந்திரபழம் கேரளா, கன்னியாகுமரி போன்ற இடங்களில் மிகவும் பெயர்பெற்றது. ஏத்தப்பழம் என்றும் அழைக்கப்படும் இந்த நேந்திரம் பழத்தில் எக்கச்செக்கமான சத்துக்கள் நிறைந்துள்ளன. 

❖ உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடையும்.

❖ உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்தசோகை உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வர இரத்தம் அதிகமாகும்.

❖ குடல்புண், வயிற்று புண், வாய்ப்புண் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து. இது வயிற்றில் உள்ள புண்களை விரைவில் ஆற வைத்து, குடலை மென்மையாக்கும்.

❖ உடல் எடை குறைவாக இருப்பவர்கள், அதாவது ஒல்லியாக இருப்பவர்கள் இந்த பழத்தை தினமும் வேக வைத்து சாப்பிட்டு வர விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.

❖ நேந்திரம் பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டு வர நன்றாக பசிக்கும், நல்ல தூக்கம் வரும், மலச்சிக்கல் பிரச்சனையும் குறையும். 

Tags: 

Nenthiram palam benefits in tamil, nenthiram palam uses in tamil, health benefits of nenthra pazham, health benefits of nendran banana, how to eat nendran banana, nendran banana health benefits, nendran banana health benefits in tamil, how to eat banana for weight gain 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்