Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

ராம நவமி நைவேத்யம் பானகம் செய்வது எப்படி? | Rama Navami Naivedyam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ராம நவமி நைவேத்யம் பானகம் செய்வது எப்படி? | Rama Navami Naivedyam in TamilRepresentative Image.

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரமே ராமாவதாரம். ராமர் இவ்வுலகில் பிறந்த நாளே ராம நவமியாக வருடா வருடம் கொண்டாப்படுகிறது. அதாவது, பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம்  நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரமும் கிடைக்கும். மேலும், இந்நன்னாளில் பகவான் ராமருக்கு பிடித்து பானகம் செய்து நைவேத்தியம் படைப்பதும் வழக்கம். சரி, வாங்க பானகம் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

பானகம் செய்ய தேவையான பொருள்:

வெல்லம் - 1/2 கப்

குளிர்ந்த தண்ணீர் - 2 கப்

பச்சை கற்பூரம் - சிறிதளவு

1 எலுமிச்சை பழத்தின் சாறு

சுக்கு - 1/4 ஸ்பூன்

ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை

ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்

உப்பு - 1 சிட்டிகை

துளசி இலை - 6 to 8

பானகம் செய்வது எப்படி? 

முதலில் எடுத்து வைத்த குளிர்ந்த தண்ணீரில் வெல்லத்தை கரைத்துக் கொள்ளவும். பின்னர், எலுமிச்சை பழச்சாறு, பச்சை கற்பூரம், ஏலக்காய், சுக்கு, ஜாதிக்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

அவ்வளவு தான், இப்பொது இதில் துளிசி இலையை தூவினால் ராமருக்கு உகந்த நைவேத்தியம் தயார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்