Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீபாவளி பலகாரம்: இனிமே பருப்பு வடை செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க.. வடை மொறுமொறுப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்..

Nandhinipriya Ganeshan October 20, 2022 & 09:30 [IST]
தீபாவளி பலகாரம்: இனிமே பருப்பு வடை செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க.. வடை மொறுமொறுப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்..Representative Image.

வீட்டில் ஏதாவது விஷேசம் என்றாலே முதலில் செய்யும் பலகாரங்களில் ஒன்று இந்த பருப்பு வடை. அதுவும் மழைக்காலம் வந்துவிட்டால் அடிக்கடி அம்மாக்கள் செய்வதுண்டு. எப்பவும் ஒரே மாதிரியாக செய்யாமல் இனிமேல் செய்யும் இந்த முறையை முயற்சித்து பாருங்கள். வடை மொறுமொறுப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். பொதுவாக, வடை செய்வதற்கு இஞ்சி, பூண்டு விழுது போடுவது வழக்கம். ஆனால், நாம் செய்யும் முறையில் அதெல்லாம் சேர்க்கப் போவது கிடையாது. இதுதான் இந்த வடையின் ஸ்பெஷாலிட்டியே. சரி, வாங்க பருப்பு வடை ருசியாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தீபாவளி பலகாரம்: மொறு மொறு வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி?

பருப்பு வடை செய்ய தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 

சிகப்பு மிளகாய் - 4

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கருவேப்பிலை - சிறிதளவு

கேரட் - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

தீபாவளி பலகாரம்: இனிமே பருப்பு வடை செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க.. வடை மொறுமொறுப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்..Representative Image

பருப்பு வடை செய்வது எப்படி?

உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு இரண்டையும் கழுவி, சுமார் 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர், 3 மணிநேரம் கழித்து தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரில் உப்பு, மிளகாய் இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக முதலில் அரைத்துக்கொள்ளவும். பின்பு, இந்த பருப்பை சேர்த்து, 4-5 சுத்துவிட்டு, ஓரங்களை வழித்துவிட்டு, நிறுத்தி நிறுத்தி 3-4 முறை அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைக்கும்போது தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். பருப்பு மிகவும் நைஸாகவோ அல்லது முழு பருப்புகளாகவும் இருக்கக் கூடாது. அதை பார்த்துக்கொள்ளுங்கள். 

இப்போது அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் கொட்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், உப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து கையில் நன்றாக பிசைந்துக் கொள்ளுங்கள்.

ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி காயவிடுங்கள். பின்பு, கைகளை தண்ணீரில் ஒவ்வொரு முறையும் நனைத்துக்கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி, லேசாக தட்டிக்கொள்ளுங்கள். 

தட்டிய வடையை, சூடான எண்ணெயில் கவனமாக போட்டு பொரித்து எடுக்கவும். ரொம்ப தீய விடக்கூடாது. ஏனென்றால், வடை கசக்க ஆரம்பித்துவிடும். 

இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் எண்ணெயை வடிகட்டி சூடாக பரிமாறவும். இதில் நீங்கள் கேரட்டோடு முட்டைகோஸும் சேர்த்துக்கொள்ளலாம். சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்