Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Potato Fry in Tamil: தயிர்சாதத்துக்கு சூப்பரான மொறு மொறு சைடு டிஸ் 5 நிமித்துல... 

Nandhinipriya Ganeshan July 02, 2022 & 13:30 [IST]
How to Make Potato Fry in Tamil: தயிர்சாதத்துக்கு சூப்பரான மொறு மொறு சைடு டிஸ் 5 நிமித்துல... Representative Image.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4

மிளகு - 1/4 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

சோம்பு - 3/4 ஸ்பூன்

பூண்டு - 5 பல்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

உப்பு தேவைக்கேற்ப

எளிமையான முறையில் டேஸ்ட்டான கேரள ஸ்டைல் முட்டை தொக்கு செய்வது எப்படி...?

செய்முறை:

❖ முதலில் உங்க வீட்டில் சிறிய உரல் கல் இருந்தால் அதில் சீரகம், சோம்பு, மிளகு, பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக இடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

❖ பின்னர், உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி வட்டமாகவோ அல்லது உங்களுக்கு வேண்டிய வடிவத்திலோ நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். 

❖ இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மொறுமொறு ஸ்நாக்ஸ் முட்டை கட்லெட் செய்வது எப்படி…?

❖ எண்ணெயில் வதக்கி கொண்டிருக்கும்போதே சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். 

❖ இப்போது நாம் இடித்து வைத்திருந்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த கலவை அனைத்து  உருளைக்கிழங்கு துண்டுகளிலும் படும்மாறு நன்றாக வதக்கவும். 

❖ மிதமான தீயில் இந்த உருளைக்கிழங்கு மொறு மொறுப்பாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். 

❖ அவ்வளவு தான் தயிர்சாதத்திற்கு சூப்பரான மொறு மொறு உருளைக்கிழங்கு வருவல் (Crispy Potato Fry) ரெடி..!!


சட்டி, சாம்பாரே சாப்பிட்டு போர் அடிச்சிரிச்சா? பத்தே நிமிசத்துல புதிய சுவையில் வெங்காய தொக்கு.. பத்து நாளு ஆனாலும் கெடாது


 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tags:

How to make potato fry in tamil | Potato recipes in Tamil | Crispy Potato Fry | Urulaikilangu varuval


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்