Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Anthrax Symptoms In Tamil: ஐயோ.. ஆந்த்ராக்ஸ் மனிதர்களுக்கு வந்தா அறிகுறிகள் இப்படி தான் இருக்குமா? 

Nandhinipriya Ganeshan July 02, 2022 & 11:30 [IST]
Anthrax Symptoms In Tamil: ஐயோ.. ஆந்த்ராக்ஸ் மனிதர்களுக்கு வந்தா அறிகுறிகள் இப்படி தான் இருக்குமா? Representative Image.

Anthrax Symptoms In Tamil: இவ்வளவு நாட்களாக கொரோனா என்னும் உயிர்க்கொல்லி நோய் மக்களை போட்டு வாட்டி வதைத்து கொண்டிருந்தது. இந்த சின்ன வைரஸ் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்து உலகையே நடுங்கச் செய்தது. தற்போது இதன் தீவிரம் குறைந்தவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்கம்மை என்ற மற்றொரு புதிய நோய் பரவத் தொடங்கியது. அதெல்லாம் ஒருவழியாக குறைய ஆரம்பித்தவுடன் இப்போது மீண்டும் "ஆந்த்ராக்ஸ்" என்ற மற்றொரு புதிய வைரஸ் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. 

ஆந்த்ராக்ஸ் வைரஸ்:

1850 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பாசில்லஸ் ஆந்த்ராக்சிஸ் என்ற பாக்டீரியாவால் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படக் கூடிய நோய்தான் ஆந்த்ராக்ஸ் (What is Anthrax Disease in Tamil). பொதுவாக இது விலங்குகள் மற்றும் தாவரங்களை உண்ணக்கூடிய பாலூட்டிகளுக்கு மட்டுமே ஏற்படும்.

எப்படி பரவும்?

பாசில்லஸ் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாக்கள் பொதுவாகவே மண்ணில் தான் காணப்படுகிறது. இந்த பூஞ்சைக் கூடுகள் இருக்கும் நீரை விலங்குகள் பருகும் போது எளிதில் பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல், இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சிகளை உண்ணுவதால் மற்ற விலங்குகளுக்கு பரவுகிறது. 

மனிதர்களுக்கு பரவுமா?

இந்த நோய் காற்று மூலம் பரவுவது கிடையாது. ஆனால், நோய்வாய்ப்பட்ட விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கு இது எளிதில் பரவிக் கூடியது. இது மனிதர்களை தோல் வியாதி, குடல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு என்று 3 விதங்களில் பாதிக்கிறது. அதாவது நோயுற்ற விலங்குகளை தொடும்போது நம் உடலில் ஏதேனும் காயங்கள் இருந்தால் அதன் மூலம் ஆந்த்ராக்ஸ் பரவுகிறது. ஒருவேளை சுவாசிப்பதன் மூலம் பாக்டீரியாக்கள் நுரையீலை அடைந்த அந்த பாதிப்பு சற்று ஆபத்தானது. அதேபோல், நோயுற்ற விலங்குகளின் இறைச்சிகளை உண்ணும்போது குடல் பாதிப்பு ஏற்படும்.

அறிகுறிகள்: 

❖ இருமல்

❖ சளி (anthrax symptoms in humans)

❖ லேசான நெஞ்சுவலி

❖ உடல் வலி

❖ அசதி 

❖ வயிற்று வலி

❖ வாந்தி

❖ கடுமையான வயிற்று போக்கு

❖ தலை சுற்றல் 

இதையும் படிங்க: குரங்கு அம்மை நோய் இப்படி தான் பரவுதா? அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்னென்ன?

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்