Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Prawn Gravy Recipe in Tamil | மதியம் சூடான இறால் கிரேவி செய்து சாப்பிட்டா எப்படி இருக்கும்!

Priyanka Hochumin Updated:
Prawn Gravy Recipe in Tamil | மதியம் சூடான இறால் கிரேவி செய்து சாப்பிட்டா எப்படி இருக்கும்!Representative Image.

ஞாயிற்றுக்கிழமை அல்லது பண்டிகை காலங்களில் மதியம் நல்ல நாட்டுக்கோழி குழம்பு, சிக்கன் வறுவல், மீன் ப்ரை இப்படி சாப்பிடுவோம். இது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் சத்து கொடுக்கும் என்று நமக்கு தெரியும். இருப்பினும் இதையே எல்லா நேரமும் சாப்பிட்டு அலுத்து போயிடுச்சா? இந்த புத்தாண்டில் மதியம் சாப்பாடு கூட நல்ல கார சாரமான இறால் கிரேவி சாப்பிட்டா எப்படி இருக்கும். ப்பா நினச்சு பாக்கும் போதே எச்சு ஊறுத்துள்ள.

இந்த பதிவில் நல்ல சுவையான இறால் கிரேவி செய்வது எப்படி? என்று பாப்போம். இதை நீங்க சாப்பாடு, இட்லி, தோசை, சப்பாத்தி என்று எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம். இறாலில் உடல் மற்றும் எலும்புக்கு வலு கொடுக்கும் வைட்டமின் பி12, வைட்டமின் ஈ என்று நிறைய இருக்கிறது.

Prawn Gravy Recipe in Tamil | மதியம் சூடான இறால் கிரேவி செய்து சாப்பிட்டா எப்படி இருக்கும்!Representative Image

தேவையான பொருட்கள்:

இறால் - 1/2  கிலோ

சீரகம் - 1/4 ஸ்பூன்

கடுகு - 1/4 ஸ்பூன்

தக்காளி - 2

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

மல்லி தூள் - 2 ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது.

Prawn Gravy Recipe in Tamil | மதியம் சூடான இறால் கிரேவி செய்து சாப்பிட்டா எப்படி இருக்கும்!Representative Image

செய்முறை:

முதலில் வாங்கிய இறாலை சூடு தண்ணீரில் நன்கு கழுவவும். பின்னர் அதனை குளிர்ந்த நீரில் மீண்டும் கழுவி தனியாக எடுத்து வைக்கவும்.

அடுத்து தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி - கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை போகும் வரை கிண்டவும்.

பின்பு தக்காளியை சேர்த்து நன்கு கிண்டி விடவும். இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விடுங்கள்.

நன்கு கொதித்த பின்னர் கழுவிய இறாலை அதில் போட்டு உடையாமல் கிளறி விடுங்கள். இறால் மற்றும் மசாலா ஒன்றாக சேரும் வரை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்திருங்கள்.

உங்களுக்கு வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து பதத்தில் வைத்துகொள்ளுங்கள்.

இறால் சுருங்கி, வட்ட வடிவில் வந்த பிறகு வாசனைக்காக கொத்தமல்லியை தூவி இறக்கி விடுங்கள். அவ்ளோ தான் சுவையான கார சாரமான இறால் கிரேவி தயாராகி விட்டது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்