Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Shikakai Powder at Home in Tamil: நீளமான கூந்தலுக்கு ஒரிஜினல் சீயக்காய் பொடி.. இப்படி அரைத்து பாருங்க…!!

Nandhinipriya Ganeshan July 14, 2022 & 15:15 [IST]
How to Make Shikakai Powder at Home in Tamil: நீளமான கூந்தலுக்கு ஒரிஜினல் சீயக்காய் பொடி.. இப்படி அரைத்து பாருங்க…!!Representative Image.

How to Make Shikakai Powder at Home in Tamil: அந்த காலத்தில் பெண்கள் இந்த சீயக்காய் பொடியை போட்டு தான் தலை அலசுவார்கள். அதனால் தான் அவர்களுக்கு முடி உதிர்தல், பொடுகு, நுனிமுடி வெடிப்பு என எந்த பிரச்சனையும் இல்லாமல் நீளமான அழகான அடர்த்தியான கூந்தல் இருந்தது. அதுமட்டுமல்லாமல், சீயக்காய் போட்டு குளிக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணீர் செலவாவதோடு இன்னொரு ஆள் இருந்தால் மட்டுமே சுத்தமாக முடியை அலச முடியும். அப்படி பராமரித்ததால் தான் அவர்களுக்கு ஒரு முடி கூட உதிரவில்லை.

ஆனால், நாம்பலோ ஷாம்பை எடுத்தோமா அதை கையில் பிழிந்து தலைக்கு போட்டு பட்டென்று தேய்த்து சட்டென்று அலசிவிடுகிறோம். அதுமட்டுமின்றி, இந்த ஷாம்பில் இருக்கும் கெமிக்கலே பாதி முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு காரணம். எனவே, மீண்டும் அக்கால முறைக்கு திரும்பினால் மட்டுமே இருக்கின்ற முடியையாவது காப்பாற்றிக் கொள்ள முடியும். சரி, இப்போது சீயக்காய் பொடி (Seeyakai powder preparation in tamil) எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள்:

சீயக்காய் – 1 கிலோ

அரப்பு – 500 கிராம்

கரிசலாங்கண்ணி – 200 கிராம்

பூந்திக்கொட்டை – 200 கிராம் (கொட்டை நீக்கியது)

பசலைக்கீரை – 200 கிராம்

வல்லாரை – 50 கிராம்

செம்பருத்தி பூ, இலை – 200 கிராம்

தூதுவளை – 50 கிராம்

கருஞ்சீரகம் – 100 கிராம்

வெந்தயம் – 100 கிராம்

பன்னீர் ரோஜா – 50 கிராம்

கார்போக அரிசி – 50 கிராம்

துளசி – 50 கிராம்

வெட்டிவேர் – 50 கிரம்

பொன்னாங்கண்ணி – 200 கிராம்

காய்ந்த பெரிய நெல்லிக்காய் – 100 கிராம் (கொட்டை நீக்கியது)

ஆவாரம் பூ – 100 கிராம்

மருதாணி – 200 கிராம்

நீலி அவுரி – 100 கிராம்

வேப்பிலை – 100 கிராம்

எலுமிச்சை தோல் – 15

கறிவேப்பிலை – 100 கிராம்

பச்சைப்பயறு – 400 கிராம்

செய்முறை:

❖ மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் (Shikakai power ingredients in tamil) நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.

❖ அனைத்து பொருட்களையும் வெயிலில் 2 நாட்கள் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்

❖ பின் மிஷினில் கொடுத்து பொடியாக அரைத்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி கொள்ளுங்கள்.

❖ தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, இந்த பவுடரை அரிசி கழுவிய தண்ணீர் அல்லது சாதம் வடித்த கஞ்யுடன் குழைத்து தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து பின்னர் குளிக்கவும்.

❖ இயற்கை பொருட்களை கொண்ட இந்த பவுடரை முடிக்கு பயன்படுத்தி வருவதன் மூலம் கூந்தல் சம்பந்தமான அத்துனை பிரச்சைகளும் நீங்கி, முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்