Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,247.91
304.23sensex(0.42%)
நிஃப்டி22,266.95
119.05sensex(0.54%)
USD
81.57
Exclusive

மேக்கப் செய்யும் போது தவறுகள் செய்யாமல் மேக்கப் செய்வது எப்படி | natural makeup tips

Vaishnavi Subramani Updated:
மேக்கப் செய்யும் போது தவறுகள் செய்யாமல் மேக்கப் செய்வது எப்படி |  natural makeup tips Representative Image.

பொதுவாக மேக்கப் என்றால் பார்லருக்கு சென்று மேக்கப் செய்வது மற்றும் வீட்டில் சிலரும் மேக்கப் செய்வது உண்டு. அதனால் வீட்டில் தினத்தோறும் வெளியில் செல்வது மற்றும் வேலைக்குச் செல்வது இந்த சமயங்களில் மேக்கப் செய்வது என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று.

இது போன்று மேக்கப்பை வீட்டில் செய்யும் போது சிலர் எதில் ஆரம்பித்து எதில் முடிக்கவேண்டும் என தெரியாமல் இருப்பார்கள். அதை தெளிவிப்படுவதற்கும், வீட்டிலேயே மேக்கப் செய்யும் போது எந்த தவறுகளும் இல்லாமல் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். தினமும் பார்லருக்கு செல்லமுடியாமல் வீட்டில் புதிதாக மேக்கப் போடுபவர்களாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவும். வீட்டிலேயே மேக்கப் செய்யும் போது தவறுகள் செய்யாமல் மேக்கப் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேக்கப் செய்யும் போது தவறுகள் செய்யாமல் மேக்கப் செய்வது எப்படி |  natural makeup tips Representative Image

வீட்டிலேயே மேக்கப் செய்யும் போது ஏற்படும் தவறுகளைத் தவிர்ப்பதைப் பற்றிப் பார்க்கலாம்

✤ நீங்கள் வெளியில் செல்வதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பாக,மேக்கப் போடுவதற்கு ஆரம்பிக்கவும். அது ஒருமணிநேரத்தில் மேக்கப்பை முழுவதுமாக முடித்துவிட வேண்டும்.

✤ முதலில் மேக்கப் போடுவதற்கு,முன்பாக முகத்தை முழுவதுமாக கழுவ வேண்டும். அதற்குப் பின், க்ளென்ஸிங் செய்ய வேண்டும். அத்துடன் டோனிங் மற்றும் ஹெடிரேட்டிங் செய்யவேண்டும். இதனைச் செய்வதன் மூலம் முகம் பாதுகாப்பாக இருக்கும்.

✤ அது முடிந்து ஒரு சில நிமிடங்களில் ப்ரைமர் செய்ய வேண்டும். அதன் பின், மேக்கபை தொடங்க வேண்டும்.

✤ நீங்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் மேக்கப் அதிகமாகப் போட்டுவதை தவிர்க்கவும். கல்யாண  விழா மற்றும் வேறு விழாவிற்குச் செல்வதாக இருந்தால் மட்டும் பிரஷ் பயன்படுத்தி மேக்கப் போடுவது நல்லது. வெளியில் செல்வது என்றால் அதிகமாக மேக்கப் தேவையில்லை.

மேக்கப் செய்யும் போது தவறுகள் செய்யாமல் மேக்கப் செய்வது எப்படி |  natural makeup tips Representative Image

கண்களுக்கு மேக்கப் மற்றும் அதை எப்படி நீக்குவது

✤ முதலில் கண்களுக்கு மேக்கப் என்றால் உடனே eye lashes என விழாக்களுக்குச் செய்யும் மேக்கப் போல் செய்யாமல் மிகவும் எளிதாகச் செய்தால் தான் பார்ப்பதற்கு ஃப்ரெஷ் லுக் ஆக இருக்கும்.

✤ அதனால் கண்களுக்கு மஸ்காரா அல்லது காஜல் பயன்படுத்தும் போது மெல்லிசாகப் போடவும். அதிகமாக இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது.

✤ நீங்கள் விழாக்களுக்குச் சென்றால் மட்டும் கண்களுக்கு eye lashes பயன்படுத்தினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

✤ புருவங்களுக்கு ஐபுரோ பென்சில் பயன்படுத்தவும். அடுத்தது கலர்களராக லிப்ஸ்டிக் பயன்படுத்தாமல் தினமும் அணியும் துணிகளுக்கு ஏற்ற மாறி மெல்லிசாகப் பயன்படுத்தலாம்.

✤ தினத்தோறும் மேக்கப் செய்யும் போது சிறிய சிறிய மாற்றங்கள் செய்துகொண்டால் பார்ப்பதற்கு புதியதாக இருக்கும்.

மேக்கப் செய்யும் போது தவறுகள் செய்யாமல் மேக்கப் செய்வது எப்படி |  natural makeup tips Representative Image

மேக்கப் நீக்குவது

✤ நீங்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவமாக மேக்கப் செய்கிறீர்களே அதே போல் மேக்கப் நீக்குவதிலும் கவனம் தேவை. முதலில் கண்களுக்கு காஷல் அல்லது மஸ்காரா போட்டிருந்தால் அதைப் பால் கொண்டு நீக்கவேண்டும்.

✤ முதலில்  ஒரு பஞ்சு எடுத்து பாலில் நளைத்து கண்களில் அப்ளை செய்ய வேண்டும். சிலநிமிடங்கள் விட்டுத் துடைத்து எடுக்கவும். மேக்கப் ரீமுவரை பயன்படுத்தி மேக்கப்பை நீக்கவேண்டும். அதற்குப் பின், புருவத்திற்குக் கற்றாழை ஜெல் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும்.

✤ மேக்கப் நீக்கிய பிறகு, டோனர் பயன்படுத்தவேண்டும். கட்டாயமாக மேக்கபை நீக்க வேண்டும். இந்த பதிவின் மூலம் எந்த விதமான தவறுகளும் செய்யாமல் வீட்டிலேயே மேக்கப் செய்யவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்