Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

அழகான, மென்மையான உதட்டைப் பெற உதவும் லிப் ஆயில்! வீட்டிலேயே இப்படி செய்யுங்க..

Gowthami Subramani Updated:
அழகான, மென்மையான உதட்டைப் பெற உதவும் லிப் ஆயில்! வீட்டிலேயே இப்படி செய்யுங்க..Representative Image.

How to Make Lip Oil at Home: நம் உடலுக்கு அழகு சேர்க்கும் வகையில், எண்ணற்ற பயன்பாடுகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதன் படி, கண், காது, மூக்கு, உதடு, கை, கால் என தனித்தனியே பராமரித்து வருகிறோம். அந்த வகையில், உதட்டை மென்மையாக வைத்திருப்பதோடு, அதனை பளபளப்பாகவும் வைத்திருப்பது என்பது பலரின் ஆசையாகத் தான் உள்ளது. சிலருக்கு உதடு வறண்டு போய் காணப்படுவதுண்டு. இதில், உதடுகள் வறண்டு விடாமல் அவற்றை பளபளப்பாக வைத்திருக்க லிப் ஆயில் தயார் செய்யலாம். இந்தப் பதிவில், வீட்டிலேயே லிப் ஆயில் தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.
 

அழகான, மென்மையான உதட்டைப் பெற உதவும் லிப் ஆயில்! வீட்டிலேயே இப்படி செய்யுங்க..Representative Image

லிப் ஆயில் தயாரிக்க தேவையானவை

வீட்டிலேயே லிப் ஆயில் தயாரிக்கத் தேவையான பொருள்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கோகோ எண்ணெய் - அரை தேக்கரண்டி
வர்ஜின் தேங்காய் எண்ணெய் - அரை தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
லாவண்டர் எண்ணெய் - 5 துளிகள்
ஆரஞ்சு எண்ணெய் - 5 துளிகள்
தேன் மெழுகு (பீஸ் வாக்ஸ்) - அரை தேக்கரண்டி
வைட்டமின் இ டேப்ளட்ஸ் - 5
லிப் ஆயில் டியூப் - 3
ரோஸ் பவுடர் - 1 டீஸ்பூன்

இவை அனைத்தும், உதட்டுப் பராமரிப்புக்கு ஏற்றவையாகும். இவற்றை இயற்கையான தரமான பொருள்களாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

அழகான, மென்மையான உதட்டைப் பெற உதவும் லிப் ஆயில்! வீட்டிலேயே இப்படி செய்யுங்க..Representative Image

லிப் ஆயில் தயாரிக்கும் முறை

ஒரு அகலமான பீங்கான் அல்லது கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, அதில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கோகோ எண்ணெய் மற்றும் தென் மெழுகு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின், அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், இந்த கண்ணாடி கிண்ணத்தை வைக்க வேண்டும். அதே சமயம், பாத்திரத்தில் வைத்த கிண்ணம் நீரில் மூழ்காதவாறு இருக்க வேண்டும்.

இதனை லேசான சூடேற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது கண்ணாடி கிண்ணத்தில் உள்ளவை உருகி வழியும். இதில், எண்ணெயை டபுள் பாயிலிங் முறை (இந்த டபுள் பாயிலிங் முறை என்பது எண்ணெயை மெதுவான தீயில் சூடாக்குவது ஆகும். அதாவது மறைமுக வெப்பத்தை வழங்கி சிறிது சூடாக்குவதாகும்) மூலம் சூடேற்ற வேண்டும்.

குறிப்பாக, இதில் பீஸ் வாக்ஸ் (தேன் மெழுகு) உருக விட வேண்டும். இல்லையெனில், லிப் ஆயில் ஊற்றும் போது அது இறுக்கமாகி அடியில் தங்கி விடக்கூடும். இவ்வாறு 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூடேற்றினால் போதுமானது.

அழகான, மென்மையான உதட்டைப் பெற உதவும் லிப் ஆயில்! வீட்டிலேயே இப்படி செய்யுங்க..Representative Image

அதன் பிறகு வைட்டமின் இ மாத்திரைகளின் முனைகளை வெட்டி, அதை உருகிய கலவையில் பிழியவும்.

எண்ணெயுடன், வைட்டமின் இ பிழிந்ததும் லிப் ஆயில் தயாராகி விடும். பிறகு, சூட்டிலிருந்து எடுத்து விட வேண்டும். இந்த லிப் ஆயிலுடன் மேலும் பளபளப்பைச் சேர்ப்பதற்காக ரோஸ் பவுடர் சேர்த்துக் கலக்க வேண்டும்.

இவ்வாறு லிப் ஆயில் தயாரான உடன், அதனை லிப் ஆயில் டியூப்பில் ஊற்றி 30 நிமிடங்கள் வரை குளிர்ச்சிபடுத்த வேண்டும்.

அதன் பிறகு, எப்போது உங்கள் உதடு வறட்சியாகிறதோ அப்போது உதட்டின் மீது தடவலாம். இதன் மூலம், உதட்டின் வறட்சியை நீங்கியதுடன், அழகான மற்றும் மென்மையான உதட்டையும் தரும்.

இவ்வாறு இயற்கைப் பொருள்களைக் கொண்டு நாம் வீட்டில் தயாரிப்பதால், இவை சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்