Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How To Make Vanilla Ice Cream At Home In Tamil: சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளு குளு ஹோம் மேட் வெண்ணிலா ஐஸ்கிரீம்... இப்படி செஞ்சி பாருங்க...!!

Nandhinipriya Ganeshan July 02, 2022 & 10:40 [IST]
How To Make Vanilla Ice Cream At Home In Tamil: சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளு குளு ஹோம் மேட் வெண்ணிலா ஐஸ்கிரீம்... இப்படி செஞ்சி பாருங்க...!!Representative Image.

How To Make Vanilla Ice Cream At Home In Tamil: சம்மர் சீசன் வந்தாச்சு.. சூப்பரான வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க. இதை செய்வதற்கு கிரீம், ஐஸ்கிரீம் மேக்கர் என்று எதுவும் தேவையில்லை. 

தேவையான பொருட்கள்:

வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்

பசும் பால் - 1 லிட்டர்

முட்டையின் மஞ்சள் கரு - 3

வெண்ணெய் - 2 ஸ்பூன் 

முந்திரி பருப்பு - ஒரு கைப்பிடி அளவு

சர்க்கரை - 3/4 கப்

செய்முறை:

❖ முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து, அதில் ஒரு லிட்டர் பசும் பாலை ஊற்றி, மிதமான் சூட்டில் 45 நிமிடங்கள் வரை காய்ச்சி கொள்ளுங்கள்.

❖ பாலை காய்ச்சும் போது இடையில் ஒரு கரண்டியால் பாலை கிளவி விடவும். 45 நிமிடங்கள் கழித்து பாலை அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

❖ பின்னர் ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சர்க்கரையை சேர்த்து லேசான மஞ்சள் கலர் வரும் வரைக்கு கரண்டியால் கிளறிக் கொண்டே இருங்க. 

❖ அதன் பின் சிறிதளவு காய்ச்சிய பாலை சேர்த்து கிளறி தனியாக வைத்துக் கொள்ளவும். 

❖ இப்போது மற்றொரு அகலமான பாத்திரத்தை எடுத்து, அதில் காய்ச்சி வைத்த பால் மற்றும் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள். 

❖ வெண்ணெய் கரைந்தவுடம், முட்டை கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்துவிடுங்க. இதை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 8 நிமிடங்கள் வரை சூடுபண்ணுங்க. 

❖ இந்த கலவை இப்போது கெட்டியாக மாறும் அந்த சமயம் அடுப்பை அணைத்து விட்டு, 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கிளறி, வடிகட்டியை கொண்டு வடிகட்டி கொள்ளுங்கள்.

❖ இப்போது இந்த கலவையை காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவிள் போட்டு ஃபிரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும். 

❖ 3 மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து மிக்சி ஜாரில் போட்டு 1 நிமிடம் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் ஊற்றி ஃபிரீசரில் வைத்து விடுங்கள். 

❖ இதேபோல் மூன்று முறை செய்ய (how to make vanilla ice cream without an ice cream maker) வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.

❖ அதன்பின், நாம் எடுத்து வைத்திருந்த முந்திரி பருப்பை நெய் மற்றும் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து, ஆறவைத்து தனித்தனியாக உதிர்த்து ஐஸ்கிரீமில் சேர்த்து கலந்து விடுங்கள்.

❖ இதை மீண்டும் 3 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சுவையான ஹோம் மேட் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரெடி...!!

இதையும் படிங்க: மாம்பழ சீசன் வந்தாச்சு..! எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம் சுகர் ஃபிரீ மாம்பழ ஐஸ்கிரீம்..!!.

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

Tags:

How to make vanilla ice cream at home in tamil | How to make vanilla ice cream without an ice cream maker | How to make vanilla ice cream without cream | How to make vanilla ice cream in tamil | Homemade vanilla ice cream 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்