Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Prepare Paneer at Home in Tamil: வீட்டிலேயே ஈசியா செய்யலாம் பன்னீர்.. அரை மணி நேரம் போதும்..!

Nandhinipriya Ganeshan July 06, 2022 & 20:15 [IST]
How to Prepare Paneer at Home in Tamil: வீட்டிலேயே ஈசியா செய்யலாம் பன்னீர்.. அரை மணி நேரம் போதும்..!Representative Image.

How to Prepare Paneer at Home in Tamil: அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீரை பெரும்பாலும் கடையில் தான் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் வீட்டிலேயே எளிமையான முறையில் பன்னீர் செய்யலாம். அதுவும் அரை மணி நேரத்தில். நாம் கடையில் வாங்கி பயன்படுத்தும் பன்னீர் பெரும்பாலும் சிட்ரிக் அமிலத்தை பயன்படுத்தி செய்யப்படுகிறது. 

ஆனால், வீட்டில் செய்ய எலுமிச்சை சாறு, தயிர், அல்லது வினிகர் போன்றவற்றில் ஒன்று இருந்தால் போதும், கெமிக்கல் இல்லாத பன்னீரை நாம்பலே செய்துவிடலாம். இப்போது, வீட்டிலேயே எளிய முறையில் பன்னீர் எப்படி செய்வது என்று இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கொழுப்பு மிக்க பால் - 2 லிட்டர்

தயிர் - 1/2 கப் (அல்லது) வினிகர் - 2 டீஸ்பூன் (அல்லது) எலுமிச்சை சாறு - 5 டீஸ்பூன்

செய்முறை:

❖  முதலில் பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். 

❖  பால் நன்கு கொதித்தவுடன் தயிர் அல்லது எலுமிச்சை சாறு அல்லது வினிகர் இவற்றில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து பாலில் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். 

❖  இப்போது பால் திரிந்து போக ஆரம்பிக்கும். பால் நன்றாக திர்ந்து நீர் முழுமையாக பிரிந்த பின்பு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

❖  இதில் முக்கியமான விஷயம் சரியான நேரத்தில் அடுப்பை அணைத்துவிட வேண்டும். நீண்ட நேரம் சமைத்தால், பன்னீர் கெட்டியாக மாறவும் வாய்ப்புண்டு. 

❖  இப்போது திரிந்த பாலை ஆற வைத்து ஒரு பெரிய வடிகட்டியின் மேல் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்து, அதில் திரிந்த பாலை ஊற்றி நன்றாக தண்ணீர் இல்லாமல் பிழிந்துக் கொள்ளுங்கள்.

❖  பிழிந்தவுடன்  இறுக ஒரு முடிச்சை போட்டு அதன் மேல் ஒரு கனமான பொருளை அரை மணி நேரம்  வைத்து எடுத்தால், பன்னீர் தயார். 

❖  இந்த பன்னீரை தேவைப்பட்டால் உதிர்த்துக் கொள்ளலாம் அல்லது வேண்டிய வடிவத்திலும் வெட்டி பயன்படுத்தலாம். 

குறிப்பு: ஒருவேளை வினிகர் அல்லது எலுமிச்சை சாறு பயன்படுத்தி இருந்தால் அதன் வாசனை மற்றும் புளிப்புதன்மையை போக்க வடிகட்டிய பின்னர் குளிந்த நீரில் நன்கு கழுவ வேண்டும். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்