Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு முத்தம் என்னவெல்லாம் செய்யும்...? | Scientific Facts About Kissing in Tamil

Nandhinipriya Ganeshan February 12, 2023 & 16:55 [IST]
ஒரு முத்தம் என்னவெல்லாம் செய்யும்...? | Scientific Facts About Kissing in TamilRepresentative Image.

முத்தம் என்றால் ஆபாசம் என்பதையும் தாண்டி அன்பின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம். பொதுவாக வெளிநாடுகளில் முத்தம் என்பது சாதாரணமான ஒரு விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் தான் இதை ஆபாசமாக பார்க்கப்படுகிறது. முத்தம் கொடுப்பதால் நமது உடலில் நிகழும் அற்புத மாற்றங்களை தெரிந்தால் நீங்களே ஆச்சரியபட்டு போய்வீர்கள். ஆமாங்க... இந்த ஒரு முத்தத்தில் அத்தனை மருத்துவப் பலன்கள் இருக்கு. ஒரு முத்தத்தால் உங்கள் உடலில் என்னவெல்லாம் நடக்கிறது என்று நீங்களே பாருங்க...

ஒரு முத்தம் என்னவெல்லாம் செய்யும்...? | Scientific Facts About Kissing in TamilRepresentative Image

ஒரு முத்தம்....

ஆழமான முத்தம் முகத்திலிருந்து 34 தசைகளை இயங்க வைத்து, அவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். இது உங்க முகம் பொலிவுடன் இருக்க உதவும்.

ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. 

முத்தம் கொடுக்கும் போது உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளர்ச்சி கிடைக்கும்; இருதய துடிப்பு 58% அதிகரிக்குமாம்.

பத்து வினாடிகள் வரை கொடுக்கப்படும் முத்தத்தின் மூலமாக 9 மி.லி உமிழ்நீர் பரிமாற்றம் செய்யப்படுகிறதாம். 

இந்த உமிழ்நீரில் கொழுப்பு - 0.71 மி.கி, புரதம் - 0.7 மி.கி, நீர் - 60 மி.கி, உப்பு - 0.45 மி.கி இருக்கிறது.

மேலும், மகிழ்ச்சிக்கு காரணமான செரோட்டோனின் சுரப்பு அதிகரிக்கும்.

நமது உடலில் சுரக்கும் மற்றொரு ஹார்மோனான அட்ரினலின் ஹார்மோன் சுரப்பதும் அதிகமாகும். இது உடலில் உணர்ச்சிகளை தூண்டும் ஹார்மோன்கள் ஆகும்.

ஒரு முத்தம் என்னவெல்லாம் செய்யும்...? | Scientific Facts About Kissing in TamilRepresentative Image

மன அமைதிக்கு காரணமாக அமையும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோனும் அதிகளவில் சுரக்கப்படுகிறது. 

அதேபோல், உடல் பருமன், கொழுப்பு, கோபம் போன்றவற்றிற்கு காரணமான கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பை குறைக்கும்.

எந்த அளவிற்கு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு இணையாக முதுமையால் முகத்தில் சுருக்கம் விழுவது (Scientific Benefits of Kissing) குறையுமாம். 

முத்தம் கொடுப்பதால் ஆண்களின் மனஅழுத்தம் அதிகமாகிறதாம். அதுவே பெண்களுக்கு பெருமளவில் குறைகிறதாம். 

குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தம் கொடுப்பதன் மூலம் தனது உடலின் 26 கலோரிகள் குறைக்க முடியுமாம். ஆனால், தொப்பை குறையாது.  

முத்தமிடுவதில் அதிக உமிழ்நீரும் உள்ளதால், அது பல் சொத்தையையும் தடுக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, முத்தமிடுவதில் உள்ள மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியைத் தவிர, ஆரோக்கியமாக இருப்பதற்கும் உங்கள் வாயை சுத்தமாக வைத்திருக்கவும் இது உதவியாக இருக்கும்.

ஒரு முத்தம் என்னவெல்லாம் செய்யும்...? | Scientific Facts About Kissing in TamilRepresentative Image

முத்தம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:

முத்தமிடுதல் மற்றும் முத்தம் சம்பந்தமான ஆராய்ச்சிக்கு பிலிமடாலஜி (Interesting Facts About Kissing) என்று பெயர். 

இந்தியாவில் காதல் திருமணம் செய்தவர்களை விட வீட்டில் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் அதிகம் முத்தமிட்டு கொள்கிறார்களாம். இப்படினு ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.

ஒரு சிலர் முத்தமிடுவதற்கு பயப்படுவார்கள், அந்த முத்தம் பற்றிய பயத்திற்கு "பிலிமாஃபோபியா" என்று பெயர். 

2013 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடத்தப்பட்ட முத்தப்போட்டியில் எக்கச்சாய் மற்றும் லக்சனா திரணரத் என்ற தம்பதி 58 மணி நேரம், 35 நிமிடங்கள், 58 வினாடிகள் வரை முத்தமிட்டு உலக சாதனை படைத்தார்கள். 

திரைப்பட வரலாற்றிலேயே முதல் முத்தம் மேடை நடிகர்களான மே இர்வின் மற்றும் ஜான் ரைஸ் அவர்களின் பிராட்வே நகைச்சுவை திரைப்படமான தி விதவ் ஜோன்ஸில் காட்சிப்படுத்தப்பட்டது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்