Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Prevent Diseases in Rainy Season: மழைக்காலத்தில் என்னென்ன நோய்கள் பரவும்…. அதிலிருந்து தப்பிப்பது எப்பது? இதோ சில வழிமுறைகள்..!

Nandhinipriya Ganeshan July 29, 2022 & 14:30 [IST]
How to Prevent Diseases in Rainy Season: மழைக்காலத்தில் என்னென்ன நோய்கள் பரவும்…. அதிலிருந்து தப்பிப்பது எப்பது? இதோ சில வழிமுறைகள்..!Representative Image.

How to Prevent Diseases in Rainy Season: அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பருவநிலை என்றால் அது மழைக்காலம் தான். இது சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், இந்த காலநிலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கும் சாதகமான பருவமும் ஆகும். ஏனெனில், பெரும்பாலான குழந்தைகள் இந்த மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பல்வேறு கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். 

பொதுவாக, மழைக்காலத்தில் டைபாய்டு, ஜலதோஷம், காய்ச்சல், டெங்கு, மலேரியா, காலரா மற்றும் பூஞ்சை தொற்று நோய்த்தொற்றுகள் அதிகமாக பரவும். எனவே, இம்மாதிரியான கொடிய நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பராமரிப்பு மற்றும் தடுப்பு குறிப்புகளை அனைவரும் (prevention of diseases during rainy season) பின்பற்ற வேண்டும். 

பொதுவான மழைக்கால நோய்களைத் தடுக்கும் குறிப்புகள்:

வைரஸ் தொற்றுகள்

குறைந்த நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கு ஒரு நபருக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று மிக எளிதில் பரவக்கூடும். இதன் விளைவாக, காய்ச்சல் மற்றும் சளி (rainy season diseases and prevention) ஆகியவை பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். எனவே, இந்நோயிலிருந்து தப்ப நீங்க அதிக சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். அவ்வாறு சாப்பிடவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகளை அண்டவிடாமல், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும், நோய் தொற்றுகளிடமிருந்து உங்களை பாதுகாக்க, 

  • வெளியில் செல்வதற்கு முன்பு, ஆல்கஹால் கலந்த ஹாண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்துங்கள். 
  • சோப்பை பயன்படுத்து குறைந்தது 20 நிமிடங்களுக்கு உங்களுடைய கைகளை கழுவுங்கள்.
  • தெருவோரத்தில் விற்கப்படும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மலேரியா

கொசுக்கள் மலேரியாவை உண்டாக்குகின்றன. பெரும்பாலும், மழைநீர் தேங்கி நிற்கும் போது, அங்கு அதிகப்படியான கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, மலேரியாவை தடுக்க,

  • பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட கொசுவலைகளைப் பயன்படுத்துங்கள்.
  • அழுக்கு நீர் தேங்கி நிற்கும் இடங்களை உடனடியாக சுத்தம்படுத்துங்கள்.
  • கொசு விரட்டி லோஷன்கள், சாதனங்கள், கிரீம்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.

காலரா

'விப்ரியோ காலரா' என்ற பாக்டீரியா காலரா எனப்படும் இந்த நீரில் பரவும் தொற்றுநோயை பரப்புகிறது. இது அதிகமாக, மனித இரைப்பைக் குழாயை தான் பாதிக்கும். இதனால், கடுமையான நீரிழப்பு மற்ரும் வயிற்றுப் போக்கை ஏற்படலாம். எனவே, மழைக்காலங்களில் சுத்திகரிப்பட்ட மற்றும் கொதிக்க வைத்த தண்ணீரை அருந்துங்கள். இது நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.

டெங்கு

டெங்கு என்பது டெங்கு வைரஸால் ஏற்படும் ஒரு வகையான தொற்று. இந்த வைரஸ் தேங்கி நிற்கும் அசுத்தமான நீரில் தனது இனப்பெருக்கத்தை பெருக்குகிறது. எனவே, இந்த தொற்றுநோயை தடுக்க,

  • அழுக்கு நீரை அகற்றி சுத்தம் செய்யுங்கள்.
  • நோய் பாதித்தவர்களை கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
  • ஏனெனில், இவரை கடிக்கும் கொசு மற்றவர்களை கடிக்கும்போது உடனே இந்த தொற்று பரவத் தொடங்கிவிடும்.
  • கொசு விரட்டிகளைப் (mosquito repellents) பயன்படுத்துங்கள்.

டைபாய்டு

இது மற்றொரு பாக்டீரியா தொற்று மற்றும் மிகவும் எளிதில் பரவக்கூடிய தொற்றுநோயாகும். இது சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. தொற்று பாதிக்கப்பட்ட ஒரு நபர் வெளிப்படையாக தும்மும் போதும், இருமும் போது இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது. எனவே, உங்களை நீங்களேப் பாதுகாத்துக் கொள்ள (how to prevent rainy season diseases) கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

  • தும்மல், இருமல், உணவைக் கையாளும் முன்னும் பின்னும், கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்யுங்கள்.
  • கொதிக்கவைத்து வடிகட்டிய தண்ணீரைக் குடியுங்கள்.
  • வெளிப்புற உணவுகளை தவிர்க்கவும். நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுங்கள். 

Tags:

How to Prevent Diseases in Rainy Season | Prevention of diseases during rainy season | Rainy season diseases and prevention | How to prevent rainy season diseases


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்