Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி ?Representative Image.

இன்றைய மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி வரிசையில், ஒரு புதுவிதமான ஸ்நாக்ஸ் ரெசிபி. இது உடலுக்கு ஆரோக்கியமாகவும் சாப்பிட்டால் மிகவும் சுவையாகவும் மற்றும் காரமான ஒரு உணவு ரெசிபி. இது எளிதில் செய்யலாம். இது உடலின் வலிமை மற்றும் எலும்புகளுக்குச்  சத்துகள் அதிகரிக்க உதவும் ஒரு உணவுப் பொருள் வைத்துச் செய்யலாம். இந்த பதிவில் இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ மயோனெய்சு – 1/2கப்

✤ லாக்டேக இலை – 3

✤ மிளகு தூள் – 1/2ஸ்பூன்

✤ கடுகு பேஸ்ட் – 1ஸ்பூன்

✤ எண்ணெய் – 6 ஸ்பூன்

✤ முட்டை – 6

✤ பிரட் துண்டுகள் – 10

✤ உப்பு – சிறிதளவு

✤ வெங்காயம் – 2

✤ முட்டைகோஸ் -1

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி ?Representative Image

செய்முறை

✤ முதலில் வெங்காயத்தை எடுத்துத் தோல் உரித்து அதைக் கழுவ வேண்டும். அதற்குப் பின், வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

✤ முட்டைகோஸை எடுத்து அதைக் கழுவ வேண்டும். அதற்குப் பின், பொடிப் பொடியாக நறுக்க வேண்டும்.

✤ அதற்குப் பின், ஆறு முட்டை எடுத்து தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். அது வெந்த பின், எடுத்து மேல் தோல் உரித்துக் கொள்ளவும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி ?Representative Image

✤ அதைச் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஆறு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அதை நன்றாகச் சூடாக விட வேண்டும்.

✤ சூடான பின், அதில் உள்ள நறுக்கிய முட்டை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கிய பிறகு, அரை ஸ்பூன் அளவிற்கு மிளகு தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

✤ சிறிது நேரம் வதக்கிய பிறகு, அடுப்பை அணைத்து அந்த முட்டை கலவையைக் கீழே இறக்க வேண்டும். அதில் ஒரு டிஸ்பூன் அளவிற்கு, கடுகு பேஸ்ட் மற்றும் அரை கப் அளவிற்கு மயோனெய்சு சேர்த்துக் கொள்ளவும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி ?Representative Image

✤ அதை நன்றாகக் கிளறி விட வேண்டும். அதற்குப் பின், பிரட் டோஸ்ட் செய்ய, அடுப்பில் தோசைக் கல் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

✤ அது சூடான பின், அதில் பிரட்டை டோஸ்ட் போல் இரண்டு பக்கம் மொறு மொறு என டோஸ்ட் செய்ய வேண்டும்.

✤ டோஸ்ட் செய்த பிரட்டை எடுத்து, அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் முட்டைகோஸ் சிறிதளவு சேர்த்து, அத்துடன் லாக்டேக இலை சிறிதளவு சேர்க்கவும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி ?Representative Image

✤ அதன் மேல் கலந்த முட்டை கலவையைச் சேர்த்து அதற்கு, மேல் வெங்காயம் மற்றும் முட்டைகோஸ் சிறிதளவு வைக்கவும். அத்துடன் லாக்டேக இலை சிறிதளவு சேர்க்க வேண்டும்.

✤ அதற்கு மேல் ஒரு டோஸ்ட் செய்த பிரட்டை சேர்த்தால் சூடான சுவையான மாலை ஸ்நாக்ஸ் தயார். இது போன்று மீதமுள்ள பிரட்டை செய்யலாம்.

✤ இதில் முட்டை உள்ளதால் அது அனைவருக்கும் பிடிக்கும் மற்றும் முட்டை என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவுப் பொருள். இது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் ஒரு ரெசிபி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்