Dry Hair Home Remedies: அடிக்கடி முடி சிக்கு பிடித்தால் எரிச்சல் தான் வரும். இந்த பிரச்சனையை சுருட்டை முடி உள்ளவர்கள் அதிகமாக சந்திப்பார்கள். இது அவர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் ஒவ்வொரு நாளும். முடி தொடர்பான சிக்கல்களை போக்க பல ஹேர் கேர் பொருட்கள் இருந்தாலும், நம் கிச்சனில் உள்ள பொருட்களே அப்பிரச்சனைகளை சரிசெய்யும். இயற்கையாக முடியை பராமரிப்பதில் எப்போதும் முதல் இடம் கிச்சனில் உள்ள பொருட்கள்தான். பொதுவாக அனைவருக்கும் சிக்கு பிடிப்பது இயல்பு. ஆனால், அடிக்கடி சிக்கு பிடிப்பது மற்றும் வறண்டு போவது என்பது ஈரப்பதம் இல்லாததால் தான் ஏற்படுகிறது. சரி இந்த சிக்கு முடியை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எப்படி சமாளிப்பது (long hair tips in tamil) என்று பார்க்கலாம்.
வாழைப்பழம்: வாழைப்பழத்தை மசித்து தேவைப்பட்டால் கற்றாழையுடன் கலந்து ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி, 20 முதல் 25 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தல் வறட்சி நீங்கி, பொலிவோடும், மென்மையாகவும், சிக்கு விழாமலும் இருக்கும்.
கற்றாழை: கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு மட்டுமல்லாமல், கூந்தலுக்கும் தடவலாம். இது கூந்தலுக்கு பளபளப்பையும் ஈரப்பதத்தையும் அளிக்கிறது. கற்றாழை ஜெல்லை சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது அவகோடா எண்ணெயுடன் கலந்து நேரடியாக முடி மற்றும் ஸ்கேல்பில் தடவி, மைல்டு ஷாம்பு போட்டு குளித்து விடுங்கள். முடி சிக்கு இல்லாமல் மென்மையாக இருக்கும்.
வேப்பிலை: ஒரு கப் சூடான தேங்காய் எண்ணெயில் சில வேப்பிலைகள் அல்லது கறிவேப்பிலையை போட்டு ஒரு மணிநேரத்திற்கு அப்படியே ஊற விடுங்கள். பின் அந்த எண்ணெயை தலைக்கு தடவி சிறிது 30 ஊறவைத்து விட்டு வழக்கமான ஷாம்புவை போட்டு குளித்து விடுங்க. இது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, முடி வறண்டு போகாமலும் பார்த்துக் கொள்ளும்.
தயிர்: நம் கூந்தல் பிரச்சனைகள் அனைத்தையும் போக்குவதில் முதன்மை பொருள் தயிர். 2 ஸ்பூன் தயிரை தலையில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊறவிட்டு குளிக்க வேண்டும். இது முடியை கண்டிஷனிங் செய்யவும், வறட்சியை போக்கவும் உதவும். இது வைட்டமின் D மற்றும் B5 மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளின் நன்மைகளை கொண்டுள்ளது.
அவகேடோ: அவகேடோவில் கூந்தலில் எண்ணெய் பசையை தக்க வைக்கும் சக்தி அதிகம் உள்ளது. அவகேடோவை அரைத்து தயிருடன் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை மாஸ்க் போட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். சிக்கு முடியா எனக்கா? என்று கேட்பீங்க.
ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலை நேரடியாகவும் பயன்படுத்தலாம் அல்லது வெந்தயம் மற்றும் வேப்பிலை கலவையுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். 30 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு, மைல்டு ஷாம்பு போட்டு வாஷ் செய்யலாம். இது கூந்தல் இழைகளை மென்மைக்கவும், அவற்றை ஆரோக்கியமாக்கவும் உதவும்.
கடலை மாவு: தலைக்கும் சரி சருமத்திற்கும் சரி கடலை மாவு அவ்வளவு நல்லது. இது தலைமுடியை வலிமையாக்க ரொம்பவே உதவுகிறது. முட்டை அல்லது தயிர்யுடன் கடலை மாவை சேர்த்து தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து கழுவிடவும். இது கூந்தலுக்கு ஊட்டச்சத்து மதிப்பை பல மடங்கு அதிகரிக்கலாம். எந்த கிளைமேட்டாக இருந்தாலும் முடி உதிர்வை தடுக்கிறது. நிறைய முடி உதிர்வு இருப்பவர்கள் (hair fall in tamil tips) இதை கட்டாயம் முயற்சித்து பாருங்கள்.
வினிகர்: ஆப்பிள் சீடர் வினிகரை கொண்டு கூந்தலை அலசினாலும், கூந்தல் மென்மையாக இருக்கும். கற்றாழையுடன் கலந்து அல்லது வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து, உச்சந்தலையில் வைத்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து முடியை வாஷ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முட்டை: நல்ல பொலிவான மற்றும் மென்மையான கூந்தல் வேண்டுமானால், முட்டையின் வெள்ளைக் கருவில், சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். வறண்ட முடியை நிர்வகிக்க மற்றும் நீரேற்றத்தை மீட்டெடுக்கவும் உதவும்.
குறிப்பு: மேலே கூறியவற்றை வாரம் 1 - 2 முறை தவறாமல் செய்து வந்தால், கூந்தல் வறட்சியை விரைவில் போக்கிவிடலாம். அதோடு, கூந்தலை மென்மையாகவும், பொலிவோடும், ஆரோக்கியத்தோடும் வளர ஆரம்பிக்கும். முக்கியமாக முடி சிக்கு பிடிக்காமல் இருக்கும். முடி உதிர்வையும் (hair fall tips in tamil) குறைக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…