How to Reduce Body Pain Naturally: வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொள்பவர்களுக்கு மராடைப்புகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதை தவிர்த்து வீட்டின் சமையலறையில் (anti inflammatory home remedies) உள்ள பொருட்களை கொண்டே, உடல் வலியை போக்குவது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கற்றாழை:
கிராமப்புறங்களில் உள்ள வீட்டின் கொள்ளைப்புறங்களில் கற்றாழை வளர்த்து வந்தனர். அந்த பழக்கம் சில வீடுகளில் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கற்றாழை காற்றை சுத்தப்படுத்தும் தன்மை உடையதால், அதனை வீடுகளில் வளர்த்துவந்தனர். வலி நிவாரணிகளுக்கு கற்றாழை நல்ல பலனை கொடுக்குமாம். மேலும், அலர்ஜி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை நல்ல பலனை கொடுக்கும்.
ஆர்னிகா:
வயல் வரப்புகளில் கிடைக்ககூடிய, சூர்யாகாந்தி போன்ற சிறிய தோற்றத்தை கொண்ட இந்த வகை செடி, தலை முடியை கருமையாக்கவும், தொண்டை புண், சிராய்ப்பு, இரத்தப்போக்கு மற்றும் கீல்வாதத்தால் ஏற்படும் வலிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. மேலும், தசைப்பிடிப்பு, சுளுக்கு, எரிச்சலைக் குறைக்க இந்த வகை செடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
துளசி:
மழைக்காலங்களில் அதிகம் கிடைக்ககூடிய துளசி, காய்ச்சல் இருமலை மட்டுமல்ல, மூட்டுவலி நோயாளிகளுக்கு வீக்கத்தைக் குறைக்கவும்,வயிற்று வலியை குணப்படுத்தவும். பாம்பு மற்றும் பூச்சி கடிக்கு சிகிச்சைக்கு அளிக்கவும் உதவுகிறது.
கேப்சைசின்:
கேப்சைசினின் ஆரோக்கிய நன்மைகள் எடை இழப்புக்கு உதவுதல் மற்றும் நாள்பட்ட வலியை எளிதாக்குதல் ஆகியவை அடங்கும். முடக்கு வாதம், ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் மூட்டு வலியைப் போக்க கேப்சைசின் கிரீம் பயன்படுத்துகிறார்கள். மேலும் தீராத தலைவலியை போக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
ஏலக்காய்:
சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் ஏலக்காய். அது வாசனை பொருளாக மட்டுமல்லாமல் வலி நிவராணியாகவும் பயன்படுகிறது. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று, வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தசைப்பிடிப்புகளை போக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு.
சியா விதைகள்:
நம்மூரில் ஒரு பழமொழி உண்டு, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது போல், பாலை விட 3 மடங்கு அதிகம் கால்சியம் சத்துக்கள் இந்த சியா விதைகளில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கீழ்வாதம், போன்ற நோய்களை குணப்படுத்தவும், வலிகளை போக்கும் தன்மையும் இந்த சியா விதைகளுக்கு உண்டு.
சீமை சாமந்தி (chamomile):
பெண்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது மாதவிடாயின் போது ஏற்படும் வலி தான். இந்த வலிகளை குறைக்கவும், எரிச்சலை போக்கவும், சீமை சாம்ந்தி உதவுகிறது. சீமை சாமந்தி டீ கர்ப்பப்பையில் ஏற்படும் வீக்கம், வலி போன்றவற்றையும் குறைக்கும்.
கொத்தமல்லி:
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கவும் கொத்தமல்லி இலைகள் உதவுகிறது. மேலும், வயிற்றுப்போக்கு, குமட்டல், குடல் பிடிப்பு மற்றும் குடல் வாயு உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு. மேலும், பல்வலி மற்றும் வலி மூட்டுகளையும் குணப்படுத்துகிறது.
இலவங்கப்பட்டை:
இருமலுக்கு தற்காலிக மருந்தாக இலவங்க பட்டையை பயன்படுத்தி வருகின்றனர். வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலிக்கும் கூட இலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகுமாம்.
கிராம்பு:
கிராம்பு பல் வலிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அவை சரும வலி நிவாரணியாக செயல்படுகிறது.மேலும், உடலைப் பருமடையச் செய்யவும், வளர்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் (natural pain killers in tamil) அளிக்கிறது.
பெருஞ்சீரகம் விதைகள்:
மதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலியால்,பெண்கள் மனநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்நிலையில் பெருஞ்சீரக டீ குடித்தால் மதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி ஓரளவு குறையும்.
பூண்டு:
நெஞ்சு வலி ஏற்படும் போது நான்கு, ஐந்து பூண்டு பற்களை தீயில் வாட்டி சாப்பிட்டு வந்தால் தற்காலிகமாக நெஞ்சு வலி குறையும். மேலும் வாயுத்தொல்லையையும் பூண்டு போக்கும். இருந்த போதிலும் அந்த நேரத்தில் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
இஞ்சி:
சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும். ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கருமிளகு:
கருப்பு மிளகில் உள்ள பைபரின் அளவு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது தசைகளில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதம் ஆகியவற்றைக் குறைக்கிறது. நரம்பு வலியால் அவதிப்படுபவர்கள் கருப்பு மிளகை உட்கொண்டால் அதில் இருந்து விடுபட வாய்ப்புகள் (pain relief capsule herbal medicine) உண்டு.
குறிப்பு:
இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே இந்த தகவலுக்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது. இதை பயன்படுத்தும் முன் மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…