Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உள்ளாடைகளை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
உள்ளாடைகளை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எப்படி ?Representative Image.

நம் உடல் சுத்தம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு உடுத்தும் ஆடைகளைச் சுத்தமாகவும் மற்றும் அதைப் பராமரிப்பதும் முக்கியமான ஒன்று. சுய ஒழுக்கம் என்பது மிகவும் அவசியம் உடலை எந்த அளவிற்குச் சுத்தமாக வைக்கிறோமோ அதே அளவிற்கு உடைகளையும் குறிப்பாக உள்ளாடைகள் சுத்தம் ஆக வைத்துக் கொள்வது அவசியம்.

உள்ளடைகளின் சுத்தம் என்பது முக்கியமான ஒன்று அதைத் தினம்தோறும் சுத்தம் செய்து பராமரித்துப் பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரும் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். அதனால் இந்த பதிவில் உள்ளாடைகளைச் சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

உள்ளாடைகளை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எப்படி ?Representative Image

உள்ளாடைகளைச் சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எப்படி

✤ உள்ளாடைகள் எப்பொழுதும் நம் தேகத்துடன் தொடர்பில் இருப்பதால் அதைச் சுத்தமாகவும் மற்றும் பராமரித்து வைத்தால் மட்டும் தான் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும்.

 உள்ளாடைகள் வாங்குவது

✤ முதலில் உள்ளாடைகளைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். உள்ளாடைகளில் பல வகைகள் இருக்கும் காட்டன் மற்றும் எலஸ்டிக், பாலியஸ்டர் போன்று இருக்கும்.

✤ இதில் எது அணிந்தால் உங்களுக்கு அலர்ஜி பிரச்சனைகள் மற்றும் எரிச்சல் போன்றவை வராமல் மிகவும் பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும், வசதியாக இருக்கும் என யோசித்து வாங்குங்கள்.

உள்ளாடைகளை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எப்படி ?Representative Image

உள்ளாடை சுத்தம்

✤ உள்ளாடைகள் கைகளில் துவைப்பது நல்லது. சோப்பு தூள் மற்றும் டிடர்ஜெண்ட் போன்றவை பயன்படுத்தினால் எரிச்சல் மற்றும் அலர்ஜி வரும். அதனால் ரசனை தன்மையின் அளவு குறைவாக இருக்கும் சோப்பு பயன்படுத்துவது நல்லது.

✤ வாஷிங் மெஷினில் பயன்படுத்தித் துவைக்க வேண்டும் என்றால் மற்ற துணிகள் உடன் சேர்த்து உள்ளாடைகளைத் துவைக்க வேண்டாம். உள்ளாடைகளைத் தனியாகத் துவைக்க வேண்டும்.

✤ வாஷிங் மெஷின் என்றால் உள்ளாடைகளைத் துவைப்பதற்கு எனத் தனியாகப் பைகள் விற்கும் அதைப் பயன்படுத்தித் துவைப்பது நல்லது.

உள்ளாடைகளை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எப்படி ?Representative Image

✤ வாஷிங் மெஷினில் துவைத்தால் விரைவில் துணியின் ஆயுள் குறைந்துவிடும். துணிகள் கிழிவது மற்றும் சேதம் அடைவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

✤ உள்ளாடைகளில் வெள்ளை நிற ஆடைகளில் உள்ள அழுக்குகள் தெளிவாகத் தெரியும். ஆனால் மற்ற வண்ண ஆடைகளில் துவைக்கும் போது அழுக்குகள் இருப்பது தெரியாது அதனால் அதை நன்றாகத் துவைக்க வேண்டும்.

✤ உள்ளாடைகளை வெதுவெதுப்பான நீர் மற்றும் குளிர்ந்த நீரில் துவைக்கலாம். இதனால் ஆடைகள் எந்த விதமான சேதம் ஏற்படாது.

✤ துவைத்த துணிகளை உடனே பிழியாமல் சிறிது நேரம் தண்ணீர் வடிய விட்டு பிறகு, மெதுவாகப் பிழிய வேண்டும். அந்த துணியை வெயில் காயவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் விரைவில் துணிகள் சேதம் ஆகும். அதை வெயிலின் நிழலில் காயவைப்பது நல்லது.

✤ சிறிது நிமிடங்கள் வெயிலில் காயவைத்த பிறகு, நிழலிற்கு மாற்ற வேண்டும் இதனால் உள்ளாடைகளில் உள்ள கிருமிகள் இருந்தால் முழுவதுமாக வெயில்பட்டு இறந்துவிடும்.

உள்ளாடைகளை சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எப்படி ?Representative Image

உள்ளாடைகள் பராமரிப்பு

✤ துவைத்த ஆடைகளை எடுத்து அயர்ன் செய்யக் கூடாது. இதனால் ஆயுள் காலம் குறையும். அதனால் அதை உள்ளாடைகள் துவைப்பது மற்றும் அதைப் பராமரிப்பதில் கவனம் தேவை.

✤ துவைத்த துணியை அப்படியே மடித்து வைக்காமல் ஆடையின் வடிவில் நன்றாக கைகள் வைத்துத் தேய்த்து மடித்து வைக்கலாம். ஆடைகளுக்கு எனக் கடைகளில் விற்கும் பைகளை வாங்கி அதைப் பயன்படுத்த வேண்டும். இதனால் அதனின் வடிவமைப்புகள் சிதையாமல் இருக்கும்.

✤ மற்ற துணிகளுக்குப் பயன்படுத்துவது போல் ஸ்பிரே மற்றும் வாசனைத் திரவியங்களை இந்த உள்ளாடைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. இதனால் எரிச்சல் மற்றும் அலர்ஜி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

✤ உள்ளாடைகளைத் தினமும் துவைத்து வைப்பது மிகவும் சுகாதாரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்