Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காலையில் ஈஸியான ஒரு ரெசிபி பீட்ஸா தோசை செய்வது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
காலையில் ஈஸியான ஒரு ரெசிபி பீட்ஸா தோசை செய்வது எப்படி ?Representative Image.

தினமும் காலையில் ஒரு ஈஸியான மற்றும் சுவையான ஒரு ரெசிபி வரிசையில், இன்றைக்கு எந்த ரெசிபி. இன்றைக்கு ஒரு புதுவிதமான சுவையான மற்றும் காரசாரமான ஒரு ரெசிபி. ஒரு புதுவிதமான தோசை ரெசிபி செய்யலாம்.

காலையில் ஈஸியான ஒரு ரெசிபி பீட்ஸா தோசை செய்வது எப்படி ?Representative Image

✤ இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு தோசையாக இருக்கும். காலையில் சமையல் செய்ய நேரம் கிடைப்பது கடினம்.

✤ அதனால் புதுவிதமான மற்றும் சில நிமிடங்களில்  ஒரு ரெசிபி செய்யலாம். இந்த பதிவில் காலையில் ஈஸியான ஒரு ரெசிபி பீட்ஸா தோசை செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

காலையில் ஈஸியான ஒரு ரெசிபி பீட்ஸா தோசை செய்வது எப்படி ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ தோசை மாவு – 1கப்

✤ வெங்காயம் – 4

✤ தக்காளி -3

✤ பச்சை மிளகாய் – 3

காலையில் ஈஸியான ஒரு ரெசிபி பீட்ஸா தோசை செய்வது எப்படி ?Representative Image

✤ மிளகு தூள் – 2ஸ்பூன்

✤ சீரக தூள் – 2ஸ்பூன்

✤ கொத்தமல்லி – சிறிதளவு

✤ கருவேப்பிலை – சிறிதளவு

காலையில் ஈஸியான ஒரு ரெசிபி பீட்ஸா தோசை செய்வது எப்படி ?Representative Image

✤ முட்டை – 3

✤ உப்பு – சிறிதளவு

✤ எண்ணெய் – தேவையான அளவு

காலையில் ஈஸியான ஒரு ரெசிபி பீட்ஸா தோசை செய்வது எப்படி ?Representative Image

செய்முறை

✤ முதலில் பச்சை மிளகாய் எடுத்து நன்றாகக் கழுவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி எடுத்துக் கழுவி நன்றாக பொடிப் பொடியாக நறுக்கவும்.

✤ பெரிய வெங்காயம் எடுத்துக் கழுவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை எடுத்துக் கழுவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

✤ அடுப்பில் தோசைக் கல் வைத்து அதைச் சூடாக்க வேண்டும். அது சூடான பின், ஒரு கப் அளவிற்கு மாவு எடுத்து அதில் உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

காலையில் ஈஸியான ஒரு ரெசிபி பீட்ஸா தோசை செய்வது எப்படி ?Representative Image

✤ கலக்கிய மாவை எடுத்து இரண்டு கரண்டி அளவிற்கு மாவு தோசைக் கல்லில் சேர்த்து நன்றாக ஊத்தப்பம் போல் மாவைத் தேய்த்து விட வேண்டும்.

✤ அதன் மேல் ஒரு முட்டை உடைத்து ஊற்ற வேண்டும். அதில் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு மற்றும் இரண்டு சிட்டிகை அளவிற்கு மிளகு தூள் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

காலையில் ஈஸியான ஒரு ரெசிபி பீட்ஸா தோசை செய்வது எப்படி ?Representative Image

✤ அதில் இரண்டு சிட்டிகை அளவிற்குச் சீரக தூள் சேர்க்கவும். தோசையின் மேல் மற்றும் அதைச் சுற்றி எண்ணெய் ஊற்ற வேண்டும்.

✤ முட்டையின் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வேக விடவும்.

காலையில் ஈஸியான ஒரு ரெசிபி பீட்ஸா தோசை செய்வது எப்படி ?Representative Image

✤ ஒரு பக்கம் நன்றாக வெந்த உடன் அடுத்த பக்கம் திருப்பி போட்டு சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக வேக விடவும்.

✤ வெந்த உடன் எடுத்தால் சூடான மற்றும் சுவையான பீட்ஸா தோசை தயார். காலையில் ஒரு சூடான மற்றும் சுவையான பீட்ஸா தோசை தயார். இதே போல் மீதமுள்ள மாவை இதே போல் செய்ய வேண்டும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்