Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

கண்களை சுற்றியிருக்கும் கருவளையம் மறைய எளிமையான டிப்ஸ்...

Nandhinipriya Ganeshan September 22, 2022 & 12:20 [IST]
கண்களை சுற்றியிருக்கும் கருவளையம் மறைய எளிமையான டிப்ஸ்...Representative Image.

மினுமினுப்பான பிரச்சனையற்ற சருமம் யாரு தான் வேண்டாம் என்று சொல்வார்கள். அவற்றை பெருவதற்கு உடனே பார்லரை தான் தேடி தான் ஓடுகிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் தான் அதிகம் பார்லருக்கு செல்வார்கள். ஆனால், இப்போது ஆண்களும் பார்லர் செல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆனால், பார்லரில் பயன்படுத்தப்படும் கருவிகளோ அல்லது அழகு சாதனப் பொருட்களோ எல்லோருக்கும் செட் ஆகிவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சிலருக்கு வேண்டுமானால் ஒத்துபோகும், ஆனால் பிற்காலத்தில் விரைவில் வயதான தோற்றத்தை கொடுத்துவிடும். இந்த பிரச்சனை எதுவும் இல்லாமல் உங்கள் சருமத்தை இயற்கையாகவே அழகாக்க முடியும். 

தேன் இருக்கா? இப்படி யூஸ் பண்ணி பாருங்க..

சரி, வாங்க இன்று பலரும் சந்திக்கும் கருவளையத்தை எளிமையாக எப்படி போக்குவது என்று பார்க்கலாம். பொதுவாக, கண்களுக்கு ஓய்வு இல்லாத போது கருவளையம் ஏற்படும். கருவளையம் ஏற்படாமல் இருக்க பல வழிகள் இருக்கின்றன. ஆனால், இந்த காலத்தில் செல்போன், லேப்டாப் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. சிலர் பார்க்க இளமையாக இருப்பார்கள் ஆனால் அவர்களின் கண்களை பார்த்தால் ஒரு விதமான சோர்வு, கண்களை சுற்றி சுருக்கங்கள், கோடு விழுதல், கருவளையம், கண்களுக்கு அடியில் நீர் கோர்த்தது போல் இருக்கும். இதெல்லாம் தூக்கமின்மை, லேப்டாப், செல்போன் அதிகம் நேரம் பயன்படுத்துவது போன்ற காரணத்தால் ஏற்படுகிறது. இதை இரண்டு எளிமையான வழிகளில் மூலம் எளிதில் சரிசெய்து விடலாம்.

முகம் கலரா இருக்கணுமா? வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க...

முதல் டிப்ஸ், இதை செய்வதற்கு முதலில் ஒரு வெள்ளரிக்காயை எடுத்து துண்டு துண்டாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தன்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். பின்னர், அதை வீட்டில் ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃபிரீசரில் 4-5 மணி நேரம் வைத்துவிடுங்கள். அதன்பிறகு, உங்க முகத்தை தண்ணீரில் கழுவி நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு ஐஸ்கட்டியை எடுத்து காட்டன் துணியில் வைத்து கண்களின் புருவம், கண்களை சுற்றி உள்ள இடங்களில் மெதுவாக  10-15 நிமிடம் வரை ஒத்தடம் போல் ஒற்றி எடுங்கள். 

கருவளையம் வராமல் தடுப்பது எப்படி?

இதனால், கண்களை சுற்றி உள்ள வீக்கம் குறைந்த கண்களை சுற்றி உள்ள நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்பட்டு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதை வாரம் 2 முறை தொடர்ந்து செய்துவர கருவளையம் மறைந்து விடும். வெள்ளரிகாய் இல்லையென்றால் வெறும் ஐஸ் கட்டியை கூட இப்படி பயன்படுத்தலாம். இதுவும் நல்ல பலன் கொடுக்கும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஐஸ் கட்டிக்கு பதிலாக ஓரளவிற்கு குளிர்ந்த தண்ணீரை இந்த முறைக்கு பயன்படுத்தலாம்.

அடுத்த டிப்ஸ், இதற்கு 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இரண்டையும் ஒரு பவுலில் போட்டு நன்றாக குழைத்து கண்களுக்கு மேல் தடவி 5 நிமிடம் விரல்களால் நன்றாக மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்யும்போது கண்களை சுற்றியுள்ள அனைத்து இடங்களுக்கும் இரத்த ஓட்டம் சீராக பரவும். பின்னர் இதை 10 நிமிடம் அப்படியே வைத்து கண்களை மூடி இருங்கள். அதன்பிறகு குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். இதையும் வாரம் 2 முறை செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்