Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How To Remove Head Lice Naturally At Home: ஏழே நாளில் ஈறு, பேன் தொல்லை அடியோடு ஒழிக்க பாட்டி வைத்தியம்...!!

Nandhinipriya Ganeshan June 29, 2022 & 17:45 [IST]
How To Remove Head Lice Naturally At Home: ஏழே நாளில் ஈறு, பேன் தொல்லை அடியோடு ஒழிக்க பாட்டி வைத்தியம்...!!Representative Image.

How To Remove Head Lice Naturally At Home: பொதுவாக தலையில் பேன் வைத்திருப்பவர்கள் கைகள் எப்போதுமே தலையை சொறிந்து கொண்டே தான் இருப்பார்கள். இப்படி எல்லா நேரமும் தலையை சொறிந்துக் கொண்டிருந்தால் மற்றவர்கள் நம்மை கேவலமாக பார்ப்பார்கள். இந்த பேன்கள் நமது தலையில் உட்கார்ந்து கொண்டு உயிரை வாங்கும். இதற்காக மெடிக்கலில் மருந்துகள் கிடைக்கின்றன. ஆனாலும் கூட சுத்தமாக ஒழிக்க முடியாது. அதற்காக அடிக்கடி பயன்படுத்தினால் மருந்துகளில் இருக்கும் கெமிக்கல்கள் முடி உதிர்வை ஏற்படுத்துவதோடு, மற்ற பிற சரும, முடி பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். 

ஆனால், இதை இயற்கை முறையில் எந்த பயமும் இல்லாமல் சுத்தமாக ஒழிக்க முடியும். அந்த வகையில் பேன் தொல்லையை ஒழிக்க இதோ சில பாட்டி வைத்தியம்...

குப்பைமேனி: ஈறு, பேன் நீக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த குப்பை மேனி கீரை. குப்பை மேனிக் கீரையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு, ஈறு, பேன் தொல்லை விரைவில் (how to get rid of head lice permanently) நீங்கும். 

 சீதாப்பழ விதை: சீதாப்பழத்தின் கொட்டைகளை இரண்டு நாட்கள் நன்றாக சூரிய ஒளியில் காய வைத்து, பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். இதை இரவில் தலைக்குத் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் குளித்தால் பேன் தொல்லை குறையும். (அல்லது) அந்த பொடியை சீயக்காயில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தாலும் பேன் தொல்லை நீங்கும். 

துளசி: துளசி இலையை நைசாக அரைத்து, தலையில் தடவிச் 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான தண்ணீரில் முடியை அலசினால், பேன்கள் செத்து உதிர்ந்துவிடும். முடியும் கருமையாக வளரும். 

இதையும் படிக்கலாமே: ஆண்கள் அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபடுவதால் உண்டாகும் மோசமான பின்விளைவுகள்....

வேப்பிலை: வேப்ப எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் மைல்டான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகு, ஈறு, பேன் தொல்லை ஒழியும். (அல்லது) வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து அலசி விடுங்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இப்படி செய்தால் பேன் ஒழிந்து விடும். 

இதையும் படிக்கலாமே: என்னதான் சுத்தமா குளிச்சாலும், வியர்வை நாற்றம் மட்டும் கொறஞ்சபாடில்லையே என்று கவல படுறீங்களா...? கவலைய விடுங்க.. இத பண்ணுங்க...

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்