Sat ,May 11, 2024

சென்செக்ஸ் 72,664.47
260.30sensex(0.36%)
நிஃப்டி22,055.20
97.70sensex(0.44%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே முகத்தில் ஏற்படும் கருமையை நீக்குவது எப்படி | dark spots on face removal tips

Vaishnavi Subramani Updated:
வீட்டிலேயே முகத்தில் ஏற்படும் கருமையை நீக்குவது எப்படி | dark spots on face removal tipsRepresentative Image.

அதிகமாக வெயிலில் செல்பவர்களாக இருந்தாலும் மற்றும் வெயிலில் அதிகமாக விளையாடுபவர்களாக இருந்தாலும் இவர்களது முகம் மிகவும் கருமையாகவும் மற்றும் பொலிவு இழந்தும் காணப்படுகிறது. இதனைச் சரிசெய்வதற்குக் கடைகளில் முகத்திற்கு விற்கும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவது விலை அதிகமாகவும் மற்றும் அது முகத்திற்கு சேராமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால் வீட்டிலேயே முகத்தில் உள்ள கருமைகளை நீக்குவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டிலேயே முகத்தில் ஏற்படும் கருமையை நீக்குவது எப்படி | dark spots on face removal tipsRepresentative Image

வீட்டிலேயே முகத்தில் உள்ள கருமைகளை நீக்குவது எப்படி

இந்த பதிவில் முகத்தில் உள்ள கருமையை வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி இரண்டு க்ரீம் தயாரித்து முகத்தில் அப்ளை செய்வது எப்படி என்பதைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.

முதல் க்ரீம் 

✤  இந்த முறையில் முழுவதுமாக இயற்கையான பொருள்கள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து தான் செய்வோம்.

தேவையான பொருள்கள்:

✤  மஞ்சள் தூள் – 1/4கப்

✤  பன்னீர் – தேவையான அளவு

✤  அதிமதுரம் – ஒரு சிட்டிகை

✤  அரிசிமாவு – 1/2கப்

✤  முல்தானி மட்டி -1/4கப்

வீட்டிலேயே முகத்தில் ஏற்படும் கருமையை நீக்குவது எப்படி | dark spots on face removal tipsRepresentative Image

முகத்திற்கு க்ரீம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி

✤  முதலில் ஒரு பாத்திரத்தில் அரை கப் அளவிற்கு அரிசி மாவு மற்றும் முல்தானி மட்டி கால் கப் அளவிற்குச் சேர்க்கவும்.

✤  அதில் ஒரு சிட்டிகை அளவிற்கு அதிமதுரம் சேர்த்துக் கொள்ளவும். இது சருமத்தை ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும்.

✤  வறண்ட சருமத்தில் கூட இந்த அதிமதுர கலவையைப் பயன்படுத்தினால் ஈரப்பதம் உள்ள சருமம் போல் மாறும். இது சருமத்தில் கரும் புள்ளிகள் இருந்தால் எளிதில் நீக்கி மிகவும் அழகான சருமம் போல் மாறும்.

✤  அத்துடன் முல்தானி மட்டி மற்றும் பன்னீர், சிறிதளவு மஞ்சள் தூள்  சேர்த்து நன்றாக முகத்திற்குப் பயன்படுத்தும் க்ரீம் போல் கலக்கவும். முகத்தில் இதை அப்ளை செய்வதற்கு முன்பாக, முகத்தை நன்றாகக் கழுவவேண்டும்.

✤ அதன் பின், முகத்திற்குச் சிறிதளவு ரோஸ்வாட்டர் இருந்தால் அதை நன்றாக அப்ளை செய்து கொள்ளவும். அதை சில நிமிடங்கள் உலர விடவும்.

✤ அதன் பின், கலக்கி வைத்த க்ரீமை பிரஷ்ஷை பயன்படுத்தி எடுத்துக் கொள்ளவும். முகத்தில் கீழ் இருந்து மேல் என அப்ளை செய்யவேண்டும்.

வீட்டிலேயே முகத்தில் ஏற்படும் கருமையை நீக்குவது எப்படி | dark spots on face removal tipsRepresentative Image

✤ இதே போன்று சருமத்திலிருந்து காதுகளுக்குப் பக்கம் மற்றும் வாயில் இருந்து காது பக்கம் என அப்ளை செய்ய வேண்டும்.

✤  இதைக் கண்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக வெள்ளரிக்காய் கண்களுக்கு வைக்கலாம். இதை 15 முதல் 30 நிமிடங்கள் வரை காய விடவும்.

✤  அதற்குப் பின், முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.இந்த முறையில் முகம் மிகவும் பொலிவுடனும்,கருமை பகுதிகள் முழுவதுமாக நீக்கி மற்றும் அழகாகவும் இருக்கும்.

✤ இந்த முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களும் சரியாகும். இதை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தலாம்.

வீட்டிலேயே முகத்தில் ஏற்படும் கருமையை நீக்குவது எப்படி | dark spots on face removal tipsRepresentative Image

இரண்டாம் க்ரீம்

✤  இந்த முறையில் செய்வதன் மூலம் முகம் மிகவும் பளபளப்பாகவும், அழகாகவும் மற்றும் முகத்தில் உள்ள கருமை பகுதிகள் எளிதில் நீக்கும். இந்த முறையை இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் கூட நல்ல பலன் தெரியும்.

தேவையான பொருள்கள்

✤  தேன் -1/4கப்

✤  எலுமிச்சை பழம் -1

✤  தயிர் -1/4கப்

✤  தக்காளி – 1

வீட்டிலேயே முகத்தில் ஏற்படும் கருமையை நீக்குவது எப்படி | dark spots on face removal tipsRepresentative Image

முகத்திற்கு க்ரீம் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி

✤ முதலில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதில் உள்ள விதைகளை எடுத்து விட்டு அதை நன்றாகப் பிழிந்து கொள்ளவும்.

✤ அதை 5 சொட்டுகள் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் தேன் ஒரு 10 சொட்டுகள் சேர்த்துக் கலக்கவும்.

✤ தக்காளி மேல் தோல்லை சீவிக் கொண்டு அதை நன்றாகப் பிழிந்து அதில் வரும் சாறை மட்டும் எடுத்து அந்த கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.

✤ அத்துடன் கெட்டியான தயிர் சேர்த்து நன்றாகக் கலந்தால் நீங்கள் நினைத்த முகத்திற்குப் பயன்படுத்து க்ரீம் தயார்.

வீட்டிலேயே முகத்தில் ஏற்படும் கருமையை நீக்குவது எப்படி | dark spots on face removal tipsRepresentative Image

✤ இந்த க்ரீம் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்பாக, முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அதற்குப் பின், இந்த க்ரீம் பிரஷ்ஷில் எடுத்து முதல் முறையில் சொன்னதைப் போல் க்ரீமை கீழ் இருந்து மேல் மற்றும் சருமத்திலிருந்து காது பகுதி மற்றும் வாயில் இருந்து காது பகுதி என அப்ளை செய்ய வேண்டும்.

✤  இதை அப்படி 30 நிமிடங்கள் உலர விடவேண்டும். இதைக் கண்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக வெள்ளரிக்காய் பயன்படுத்தலாம்.

✤ 30 நிமிடங்களுக்குப் பிறகு, அதை நன்றாகக் கழுவ வேண்டும். இந்த முறை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று பயன்படுத்தலாம்.

✤ இந்த முறையைப் பின்பற்றினால் விரைவில் முகத்தில் இருக்கும் கருமையான தோற்றம் மற்றும் கரும்புள்ளிகள், சுருக்கங்கள் என அனைத்து நீக்கி முகம் மிகவும் அழகாகவும் மற்றும் பொலிவுடனும், பளபளப்பாகவும் மீண்டும் கருமைவராமால் பாதுகாப்பாக வைத்து இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்