Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க சூப்பரான டிப்ஸ்… இத ட்ரை பண்ணுங்க… உங்க முகத்துல முகப்பருவே வராது…!

Nandhinipriya Ganeshan September 11, 2022 & 08:00 [IST]
முகத்தில் பருக்கள் வராமல் இருக்க சூப்பரான டிப்ஸ்… இத ட்ரை பண்ணுங்க… உங்க முகத்துல முகப்பருவே வராது…!Representative Image.

Pimple Remove Tips in Tamil: முக அழகை பராமரிக்க பல வழிகளை செய்து வருகிறோம். அதேபோல முகத்தை இருமடங்கு அழகாக தோற்றம் தருவதற்கு பல வகையான மேக்அப் புராடக்ட்களை பயன்படுத்துவோம். இது எப்படி நமது முகத்தை அழகானதாக மாற்றுகிறறோ அதேபோல் மோசமானதாகவும் மாற்றி விடுகிறது. அதாவது அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முகத்தை ஜொலிப்பாக காட்டிவிட்டு, அதன்பின் பல வகையான சரும பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. இதனால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், கீறல்கள் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. 

இதனால் மட்டும் தான் முகத்தில் பருக்கள் வருகிறதா என்று கேட்டால், அதற்கு பதில் கிடையாது. முகத்தில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதினாலும் ஏற்படும். இது ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கக்கூடியது. பெரும்பாலும் பருக்கள் இளம்பருவ ஆண், பெண்களுக்கு ஏற்படுவது வழக்கம். ஏனெனில், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் இது நடக்கலாம். மேலும், பருக்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன, அவற்றை எல்லாம் தடுத்து, பருக்கள் வராமல் முகத்தை எப்படி மென்மையாக வைத்துக் கொள்வது என்று பார்க்கலாம். இந்த தடுப்பு முறைகளை கடைப்பிடித்து (Pimples Treatment in Tamil) வந்தாலே போதுமானது.. உங்களுடைய முகத்தில் பருக்களே வராது.. ஒருவேளை ஏற்கனவே இருந்தாலும் காணாமல் போய்விடும். 

பருக்கள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்:

1. உங்களுடைய மேக் அப் புராடெக்ட்களை குறைக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், அது உங்க முகப்பருவை மோசமாக்க வாய்ப்புள்ளது. 

2. உங்கள் முடி பராமரிப்புப் பொருட்களைச் சரிபார்க்கவும், ஏனெனில் அதில் எண்ணெய்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளன, அவை முகத்தில் துளைகளை அடைத்து, அதன் மூலம் பருக்கள் மற்றும் முகப்பருவை ஏற்படுத்தும். 

3. முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் வியர்வையை அகற்ற சோப்பு போட்டு தினமும் இரண்டு முறைக்கு மேல் கழுவுங்கள்.

4. உங்கள் தோல் வகைக்கு பொருத்தமான தோல் பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது, பருக்கள் வருவது தடுக்கும். 

5. அடிக்கடி முகத்தை தொடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கைகளில் இருக்கும் கிருமிகள் முகத்தில் பரவி முகப்பருவை ஏற்படுத்தும். மேலும், ஏற்கனவே இருக்கும் பருக்களை கீறவோ, அழுத்தவோ கூடாது. 

6. மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்.. இது முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கும். 

7. உங்களுடைய சருமத்தை நீரேற்றமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கு நிறைய தண்ணீர் குடிங்க. இதுதான் முக்கியமான தடுப்பு முறையாகும்.

8. பருக்கள் வராமல் இருக்க வேண்டுமென்றால், உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு முறை குளித்தப்பிறகும் காமெடோஜெனிக் அல்லாத மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துங்கள்.

9. அதிகமான எண்ணெய் பலகாரங்கள், மற்றும் ஃபாஸ்ட்புட் உணவுகளை தவிர்க்கவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்