Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Stress Relief Yoga in Tamil: மன அழுத்தத்தை குறைக்க உதவும் யோகாசனங்கள்...!!

Nandhinipriya Ganeshan June 20, 2022 & 15:30 [IST]
Stress Relief Yoga in Tamil: மன அழுத்தத்தை குறைக்க உதவும் யோகாசனங்கள்...!!Representative Image.

Stress Relief Yoga in Tamil: ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ, மன கவலையும் மன அழுத்தமும் மனிதனை போட்டு வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த பரப்பரப்பான காலத்தில் உட்காருவதற்கு கூட நேரம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு இரவும் தூங்க முடியாமல் அவதிபடுகிறார்கள். 

ஆனால், யோகா செய்பவர்களுக்கு இந்த கவலை இருக்காது. ஏனென்றால், தினமும் யோகா செய்வதால் மன அழுத்தத்தை நீக்குவது முதல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை பல ஏராளமான அற்புத நன்மைகளை வழங்குகின்றது. குறிப்பாக மனநிலையை சரிசெய்து நன்றாக தூங்க உதவுகிறது. இப்போது மன அழுத்தத்தை (Yoga for Stress Relief in Tamil)  குறைக்கும் யோகா என்னென்ன என்று விரிவாக பார்க்கலாம். 

உஸ்ட்ராசனம்: முதலில் மண்டியிட்டு பின்னர் பின்பக்கம் வழியாக கைகளால் பாதங்களை தொடவேண்டும். இந்த யோகாவை காலை நேரம் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். இந்த யோகா செய்வதால் இடுப்பு பகுது நெகிழ்வாகிறது, மற்றும் மார்பு பகுதியில் விரிவு ஏற்பட்டு சுவாசத்தை மேம்படுத்துகிறது. மேலும் செரிமானத்தையும் (stress relief yoga poses)  சீராக்குகிறது. 

தினமும் யோகா செய்வதால் இத்தன நன்மைகளா..? 

புஜங்காசனம்: முதலில் குப்புறப்படுத்துக் கொண்டு, உள்ளங்கைகளை தலைக்கருகே, தரையில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். கால்விரல்கள் தரையில் படுமாறும், குதிகால்கள் வானத்தை பார்த்தபடியும் இருக்க வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொண்டு, ஆழ்ந்த மூச்சை விடுங்கள். இப்போது உள்ளங்கைகளை மெதுவாக ஊன்றி, தலையை மேலே உயர்த்துங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னால் வளைக்க வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை விடுங்கள். 15 வினாடி அப்படியே இருக்க வேண்டும். அதன்பிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட வேண்டும். இவ்வாறு உடலில் இரத்த ஓட்டம் மேம்படுகிறது, அதே நேரத்தில் உடல் மற்றும் மன அழுத்ததையும் குறைக்கிறது. 

தினமும் பிராணாயாமம் செய்துவந்தால் ஆயுளை நீட்டிக்கலாம்...!

கருடாசனம்: கால்களையும் கைகளையும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு நிற்க வேண்டும். முன்னாள் இருக்கும் ஏதாவது ஒரு புள்ளியின் மீது கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் இடுப்பு, தோள்பட்டை உள்ள பகுதிகள் மிகுந்த அழுத்தம் பெறும். அப்போது உணர்வுகளை தூண்டிவிடும் புள்ளிகள் சாந்தமடையும். இதனால் கோவம், மன அழுத்தம் (stress relief yoga) குறையும்.

உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா அப்ப இந்த யோகா தான் செய்யனும்..!! யோகாசனத்தின் வகைகள் & பயன்கள்..

பாலாசனம்: தரையில் கால்களை உட்புறமாக மடக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் தலையை தரையில் படுமாறு, உள்ளங்கைகள் தரையை பார்த்தப்படி முன்புறம் நோக்கி தரையில் வைக்க வேண்டும். அதே நிலையில் கைகளை மட்டும் முன்புறமாக கோர்த்துக் கொள்ள வேண்டும். இந்த யோகா செய்வதால் மார்பு, முதுகு மற்றும் தோள்கள் வலுவாகிறது. அதுமட்டுமல்லாமல், தலைச்சுற்றல் அல்லது சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யவும், முதுகு, இடுப்பு, தொடைகள் மற்றும் கணுக்கால், முதுகு வலியை குறைக்கவும் உதவும். இதனை தினமும் செய்து வந்தால், குறிப்பாக மன அழுத்தம், பதட்டத்தை குறைக்க உதவுகிறது. 

வஜ்ராசனம்: கால்களை மடித்து உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்க முழங்கால்களுக்கு இடையில் நான்கு விரல்கள் இடைவெளி விட்டு உங்க குதிகாலில் பிட்டத்தை வைத்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இரு கால்களின் பெருவிரலும் ஒன்றுக்கொன்று தொட வேண்டும். உங்களுடைய கைகளை பின்புறம் கோர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது, மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். உங்களுடைய மொத்த கவனமும் சுவாசிப்பதில் இருக்க வேண்டும். 5 முதல் 10நிமிடங்கள் இதே நிலையில் இருக்க முயற்சிக்க வேண்டும். 

முதல் முறையாக யோகா செய்பவர்களுக்கான ஆரம்ப நிலை யோகா பயிற்சிகள்..

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்