Summer Tips in Tamil: எல்லா பெண்களுக்கும் மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி காலம் (Periods Time) என்பது வலிமிக்க மற்றும் அசௌகரியமான காலமாகும். இந்த நேரத்தில் பெண்கள் கடுமையான வயிற்று வலி மற்றும் பல பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். இந்த மாதிரியான நேரத்தில் பெண்கள் சானிட்டரி பேடுகளை பயன்படுத்துவது வழக்கும். ஆனால், பெண்களுக்கு சாதாரண மாதவிடாய் நாட்களில் ஏற்படுவதைவிடவும், கோடைக்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம்.
இந்த நேப்கின்களால் சில பெண்களுக்கு அந்தரங்க பகுதிகளைச் சுற்றி கடுமையான அரிப்புக்கள் மற்றும் எரிச்சல் ஏற்படும். இதற்கு பேடுகளில் இருந்து வெளிவரும் நறுமணம், சிந்தெடிக் மெட்டீரியல் மற்றும் கெமிக்கல்கள் தான் காரணம். ஆனால், சம்மர் சீசனில் பிறப்புறுப்பு பகுதியில் அதிகமான வியர்வை இருக்கும். இதனாலும் அதிகமான எரிச்சல் ஏற்பட்டு மாதவிடாய் சொறி (Tips to Periods Rashes) ஏற்படக்கூடும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட அடிக்கடி நேப்கின்களை மாற்றுவது சிறந்த வழியாக இருந்தாலும், ஏற்கனவே இருக்கும் அரிப்புக்களை சமாளிக்க ஒரு சில வழிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உள்ளாடை அணிவதில் கவனம்
மாதவிடாய் காலங்களில் பருத்தி உள்ளாடைகளை அணிவது சரியான காற்றோட்டத்தை வழங்குகிறது. அவ்வாறு அணிவதால் அந்த பகுதிகளில் காற்று சென்று வியர்வையை தடுக்கிறது. மேலும், இது சொறி ஏற்படுவதற்கான வாய்ப்பை முழுவதுமாக குறைக்கிறது. மேலும், பீரியட்ஸ் நேரங்களில் ஜீன்ஸ் மற்றும் ஜெங்கிஸ் போன்ற இருக்கமான ஆடைகளை அணிவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பீரியட்ஸ் நேரத்தில் தளர்வான மற்றும் வசதியான பேண்ட் அல்லது பாவாடைகளை அணிவது ரொம்ப நல்லது. ஏனெனில், இது வியர்வையை குறைத்து பாக்டீரியா உற்பத்தியாவதை குறைக்கும்.
சரியான பேடுகளை தேர்ந்தெடுப்பது அவசியம்
இந்த மாதிரியான நேரங்களில் பேடுகளை பயன்படுத்துவதால் தொடை மற்றும் பிறப்புறப்பு பகுதிகளில் தடிப்புகள், அரிப்பு ஏற்படுவது வழக்கம். ஆனால், உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு சரியான பேடைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். அந்த வகையில், மென்மையான் வெளிப்புற அடுக்குகளை கொண்ட விரைவாக உறிஞ்சக்கூடிய நாப்கின்கள் சிறந்த தேர்வு. ஒருவேளை, உங்களுக்கு மிகவும் மிருதுவான சருமமாக இருந்தாலோ அல்லது ஒவ்வொரு முறையும் பீரியட்ஸ் ஆகும்போதும் தீவிர சொறி ஏற்பட்டாலோ, உடனே யோசிக்காமல் ஆர்கானிக் அல்லது பருத்தி பேடுகளுக்கு மாறுவது நல்லது.
நோ ஷேவிங்.. நோ வேக்சிங்.. அக்குள் முடிகளை அகற்ற ஈஸியான டிப்ஸ்..!.
மென்சுரல் கப் பயன்படுத்தலாம்
சானிட்டரி பேடுகளை விட மென்சுரல் கப்கள் சிறந்த தேர்வு. ஏனெனில், மென்சுரல் கப்கள் அதிக ரத்தப்போக்கை தக்கவைத்துக் கொள்ளகூடியவை. இவை மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. பொதுவாக மென்சுரல் கப்கள் நுண்ணுயிரிகளை அழிக்க கூடியது. இதை அப்புறப்படுத்துவதும் எளிது. மேலும், பீரியட்ஸ் காலத்தில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே, நாப்கின்களுக்கு பதிலாக இதை பயன்படுத்தி பாருங்கள். ஒவ்வொரு பெண்களுக்கும் அளவு வித்தியாசப்படும். எனவே, சரியான அளவில் வாங்கி முறைப்படி பயன்படுத்துங்கள்.
கிரீம்களை யூஸ் பண்ணலாம்
இந்த மாதிரியான நேரத்தில் ஏற்படும் தடுப்புகளை குணப்படுத்த கேலமைன் போன்ற இயற்கைப் பொருட்களால் ஆன கிரீம்களைப் பயன்படுத்தலாம். பொதுவாக, கேலமைன் அரிப்பு, வலி, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை குறைக்கக் கூடியவை. ஆனால், நீங்களே ஒரு கிரீமை வாங்கி பயன்படுத்த கூடாது. மருத்துவரிடம் சென்ற ஆலோசனை பெற்று, அதன்பின் அவர் கூறும் கிரீம்களை மட்டும் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், உடலில் மற்ற பகுதிகளை விட பெண்ணுறுப்பு என்பது மிகவும் மென்மையான பகுதி. இதில் ஹார்ஸான கிரீம்களை பயன்படுத்தினால் அது வேறு சில பிரச்சனைகளில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே, கிரீம்களை பயன்படுத்தும் போது கவனத்தோடு இருப்பது மிகவும் அவசியம்.
அந்த இடத்தை தூய்மையாக வைத்திருங்கள்
மாதவிடாய் காலத்தில் குறிப்பாக சம்மர் சீசனில் உங்களுடைய பிறப்புறுப்பு பகுதிகளை தூய்மையாகவும், காற்றோட்டமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், மற்ற நாட்களை காட்டிலும் கோடைக் காலங்களில் அதிகமான வியர்வை வெளியேறும். மேலும், அப்பகுதியின் pH அளவு 3 முதல் 4.5 வரை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில், இது பிறப்புறுப்பில் பாக்டீரியா வளர்ச்சியை தடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும். pH அளவை எப்படி சமநிலைபடுத்துவது என்று தெரியவில்லையா? இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்..
சிவந்த உதடுகளை பெற ஈஸியான டிப்ஸ்!.
சில குறிப்புகள்:
மாதவிடாய் காலத்தில் இரத்தம் கட்டி கட்டியா வெளிவருகிறதா...? பயப்பட வேண்டாம்.. இத ட்ரை பண்ணுங்க....
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…