Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கைகளை கழுவினால் மட்டும் போதாது..! இப்படி கழுவ வேண்டும்..! இல்லையென்றால் கிருமிகள் போகாது...

Nandhinipriya Ganeshan May 04, 2022 & 15:35 [IST]
கைகளை கழுவினால் மட்டும் போதாது..! இப்படி கழுவ வேண்டும்..! இல்லையென்றால் கிருமிகள் போகாது...Representative Image.

Hand Wash Steps in Tamil: முற்காலங்களில் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்போது கைகளை கழுவிக்கொண்டு தான் உள்ளே வர வேண்டும் என்ற பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இது இந்தியர்களின் பாரம்பரிய வழக்கமும் கூட. குறிப்பாக, சாப்பிடும் முன் கைக் கழுவும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பரபரப்பான காலக்கட்டத்தில் பலர் வெளியே போயிட்டு வந்து கைகளை கழுவுவதே கிடையாது.

இதுநாள் வரை இல்லை என்றாலும் தற்போது உலகமே கொரோனா வைரஸ் பரவலால் கைக் கழுவுதலில் அவசியத்தை நன்றாகவே உணர்ந்துள்ளது. கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கம் இன்று மக்களிடம் அதிகரித்து வருவதும் ஒருவிதத்தில் நன்மை தான். ஏனெனில், பல நோய் தொற்றுகளில் இருந்து நமக்கு பாதுக்காப்பு கிடைக்கிறது.

உங்களுக்கு அல்சர் பிரச்சனை இருக்கா..? ரோஜா மோர் குடிங்க... அல்சர் பறந்து போகும்....

ஆனால், கைகளை கழுவினால் மட்டும் போதாது. கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பது குறித்தும் சில முக்கிய காரணிகளை மருத்துவர்கள் முன்வைக்கின்றனர். அதோடு, கைகளை முகத்தில் அடிக்கடி வைக்க வேண்டாம் என்றும் அறிவுருத்துகிறார்கள். ஏனெனில், அப்படி வைத்தால் வாய், மூக்கு, கண்கள் வழியாக தொற்றுகள் எளிதில் பரவும், இது முக சருமத்தையும் சேதப்படுத்தும்.

உங்களுடைய கைகள் வறண்டுபோய் கரடுமுரடாக இருக்கிறதா…? மிருதுவாக மாற்ற உதவும் டிப்ஸ்..!

எந்தவொரு வைரஸும் அல்லது தொற்று நோயை அழிக்க ஒரு நபர் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் நன்கு சுத்தம் செய்ய குறைந்தது 20 வினாடிகள் செலவழிக்க வேண்டும் என்று WHO பரிந்துரைக்கிறது. இப்போது, அந்த 20 வினாடிகளில் நாம் பின்பற்றவேண்டிய முக்கியமான ஏழு வழிமுறைகளை (hand wash steps in tamil) பற்றி இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம். இதை வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும்  சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம்.

தினமும் ஷவர்மா சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா...? அசைவ பிரியர்களே உஷார்...!

கை கழுவும் முறை:

படி 1: கைகளைத் தண்ணீரில் நன்கு நனைத்த பிறகு கை முழுவதையும் கழுவும் அளவிற்கு தேவையான ஹேண்ட் வாஷ் அல்லது சோப்பை பயன்படுத்துங்கள்.

படி 2: இப்போது இரு உள்ளங்கைகளையும் வட்டபாதை இயக்கத்தில் நன்கு தேய்க்கவும். கை முழுவதும் பரவும்படி தேக்க வேண்டும்.

படி 3: அடுத்ததாக இரு கைகளின் பின்புறங்களையும் அதேப்போ தேய்க்க வேண்டும். வலது கையின் பின்புறத்தை இடது உள்ளங்கையை கொண்டும், பின்னர் இடது கையின் பின்புறத்தை வலது உள்ளங்கையை கொண்டும் நன்றாக தேய்க்க வேண்டும்.

படி 4: உள்ளங்கை மற்றும் புறங்கை இரண்டையும் நன்கு தேய்த்த பிறகு, இரு கைகளின் விரல்களுக்கு இடையேயானப் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். விரல்களின் பக்கவாட்டு பகுதியில் சோப்பு நன்கு படும்படி இரு கைகளின் விரல்களையும் ஒன்றோடொன்று சேர்த்துத் தேய்க்க வேண்டும்.

படி 5: அடுத்தப்படியாக, விரல் மற்றும் நகங்களை உள்ளங்கையின் குறுக்கியில் தேய்க்கவும்.

படி 6: இறுதியாக இரு கைகளின் கட்டைவிரல் பகுதியையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும். ஒரு கையின் கட்டைவிரலை மற்றொரு கையின் விரல்களால் தேய்த்துச் சுத்தப்படுத்த வேண்டும்.

படி 7: அதையடுத்து, கைகளைத் தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவிய பின்பு உலர்ந்த சுத்தமான துணியையோ அல்லது திசு பேப்பரையோ பயன்படுத்தி துடைக்க வேண்டும்.

ஏனெனில், சுத்தமாக கைகளை கழுவிய பின்னும் ஈரமான கைகளில் கிருமிகள் உடனடியாக பரவும் அபாயம் உள்ளது. எனவே, துடைக்க மறக்கக் கூடாது.

ஆஸ்துமா உள்ளவர்கள் தெரியாமல் கூட இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதாம்.. என்னென்ன உணவுகள் தெரியுமா...?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்