Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How To Use Aloe Vera Gel On Your Face At Night: தினமும் இரவில் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு தடவுவதால், நடக்கும் மாயஜாலத்த பாருங்க…!!

Nandhinipriya Ganeshan June 18, 2022 & 13:45 [IST]
How To Use Aloe Vera Gel On Your Face At Night: தினமும் இரவில் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு தடவுவதால், நடக்கும் மாயஜாலத்த பாருங்க…!!Representative Image.

How To Use Aloe Vera Gel On Your Face At Night: கற்றாழை ஒரு இயற்கையான தோல் பராமரிப்பு மூலப்பொருளாக எவ்வளவு சக்தி வாய்ந்தது மற்றும் நன்மை பயக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வறண்ட மற்றும் வறட்சியான சருமம், டல் மற்றும் இறந்த சருமம், சன்டேன், முகப்பரு மற்றும் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்ற பலவிதமான தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு கற்றாழையை திறம்படப் பயன்படுத்த பல வழிகள் இருக்கின்றன. கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாகப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது பிற பொருட்களுடன் கலந்து கலவையாகப் பயன்படுத்துவதன் மூலமோ மேற்கூறிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கற்றாழையை சருமத்தில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகளை (benefits of aloe vera gel in tamil) முதலில் பார்க்கலாம். 

  • சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது.
  • சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது.
  • கொலாஜன் உற்பத்தி மற்றும் உயிரணு மீளுருவாக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
  • இது முகப்பரு, போர்ஸ் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகிறது.
  • முகப்பரு மற்றும் பருக்களை குணப்படுத்துகிறது.
  • சூரிய ஒளி, ரேஸர் தீக்காயங்கள், வெட்டுக்கள் மற்றும் பூச்சி கடிகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
  • இளமை, மிருதுவான மற்றும் பொலிவான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது.

தினமும் இரவில் படுக்க செல்வதற்கு முன்பு கற்றாழையை சருமத்தில் தடவி வந்தால் உங்கள் சருமத்தில் நடக்கும் அதிசயங்களை நீங்களே கண்க்கூட பார்க்கலாம். இளமை, பொலிவான, மென்மையான, மிருதுவான மற்றும் தெளிவான சருமம் வேண்டுமென்றால், உங்களுக்கு தேவையான ஒரே பொருள் ஃபிரஸ் கற்றாழை மட்டுமே. நாங்கள் இதற்கு முன்பு வீட்டில் இயற்கையான கற்றாழை ஜெல் எப்படி செய்வது என்று பதிவிட்டுள்ளோம். அதை பின்பற்றி கற்றாழை ஜெல்லை தயாரித்துக் கொள்ளுங்கள். இப்போது தினமும் கற்றாழையை முகத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று (how to use aloe vera for skin whitening in tamil) பார்க்கலாம். 

தினமும் கற்றாழையை எப்படி முகத்திற்கு பயன்படுத்துவது?

முதலில் முகத்தை குளிர்ந்த காய்ச்சாத பாலை ஒரு காட்டன் பேடில் நனைத்து முகத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற (skin whitening tips in tamil) வேண்டும். 

பின்னர், தோல் காய்ந்த உடன் மற்றொரு காட்டன் பேடில் சிறிது குளிர்ந்த ரோஸ் வாட்டரை எடுத்து உங்கள் முகத்தில் மெதுவாக ஸ்வைப் செய்யவும். இது உங்கள் சருமத்தை மென்மையாக்கும் மற்றும் சருமத்தில் எஞ்சியிருக்கும் அழுக்குகளை அகற்றும்.

நாம் தயாரித்த ஃபிரஸ் கற்றாழை செல்லை எடுத்து ஃபிரிட்ஜில் ஜில்லுனு ஆகும் வரை குளிர்ச்சியாக்கவும். பின்னர் அதை வெளியில் எடுத்து பாதாம் எண்ணெய் (உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால்) அல்லது டீ ட்ரீ ஆயில் (எண்ணெய் மற்றும்/அல்லது முகப்பரு பாதிப்புள்ள சருமம் இருந்தால்) சேர்த்துக் கொள்ளவும். இப்போது இதை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். 

இப்போது, இந்த கற்றாழை ஜெல்லை சருமம் முழுவதும் அப்ளை செய்து, இரண்டு நிமிடங்களுக்கு மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், மறுநாள காலையில் உங்கள் சருமத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவிவிடவும். இதை தினமும் பயன்படுத்த வேண்டும். அப்பறம் பாருங்க... காற்றாழை ஜெல்லை இரவில் தடவினால் என்ன (benefits of applying aloe vera gel on face overnight) நடக்கிறது என்று....

குறிப்பு: இதை நீங்க கை, கால்களுக்கும் பயன்படுத்தலாம். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என் ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்